சுதந்திர தின விழாவுக்கு முன்கள பணியாளர்களை அழைக்க வேண்டும் : மத்திய அரசு

சுதந்திர தின விழாவுக்கு முன்கள பணியாளர்களை அழைக்க வேண்டும்  :  மத்திய அரசு

கொரோனா தொற்று காரணமாக வரும் ஆகஸ்ட்15 ஆம் தேதி அன்று சுதந்திர தினம் கொண்டாட வேண்டிய வழிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா தொற்று பாதிப்பு இந்தியாவிலும் நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே போகிறது. இந்த காலக்கட்டத்தில் கொண்டாட்டங்கள் பலவும் தவிர்க்கப்பட்டு வருகிறது.

சுதந்திர தின விழாவுக்கு முன்கள பணியாளர்களை அழைக்க வேண்டும்  :  மத்திய அரசு

இந்நிலையில் 74 ஆவது சுதந்திர தின கொண்டாட்டத்தின் போது கடைப்பிடிக்க வேண்டிய நெறிமுறை வழிக்காட்டுதல்களை மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. அதில், கொரோனா தொற்றால் கூட்டம் கூடுவதை தவிர்க்கவேண்டும். சமூக இடைவெளி, முகக கவசம் அணிதல் உள்ளிட்டவை அவசியம் பின்பற்ற வேண்டும்.

சுதந்திர தின விழாவுக்கு முன்கள பணியாளர்களை அழைக்க வேண்டும்  :  மத்திய அரசு

கொரோனா முன் கள பணியாளர்களான மருத்துவர்கள்,சுகாதார ஊழியர், துப்புரவு தொழிலாளர் உள்ளிட்டோரை இந்த நிகழ்வில் அழைத்துக் கவுரவிக்கலாம். அத்துடன் கொரோனாவிலிருந்து மீண்ட சிலரையும் அழைக்கலாம் என்று உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.