பிக்பாஸ் வீட்டில் மற்றவர்களை குறை சொல்லியே பெயர் வாக்கும் நக்கீரன் இவர்தான்!

 

பிக்பாஸ் வீட்டில் மற்றவர்களை குறை சொல்லியே பெயர் வாக்கும் நக்கீரன் இவர்தான்!

பிக்பாஸ் வீட்டில் எவிக்‌ஷனுக்கான நாமினேஷன்கூட ரகசியமாக நடப்பதால் சண்டைகள் அதிகம் வருவதில்லை. ஆனால், ஒவ்வொரு வாரமும் லக்ஸரி பட்ஜெட் டாஸ்க்கில் பெஸ்ட், வொஸ்ட் என தேர்வு செய்யும்போது சண்டைகள் அதிகம் வரும். அதைத் தேர்ந்தெடுக்கும் காட்சிகள் அடங்கிய எப்பிசோட் நேற்றையது. அதனால், சில பஞ்சாயத்துகளும் வந்தன. அவற்றைக் கட்டுரையில் பார்ப்போம்.

பிக்பாஸ் 74-ம் நாள்

இப்போதெல்லாம் வேக்கப் சாங்கை உடற்பயிற்சி செய்வதற்கான தீம் மியூசிக் என்று எடுத்துக்கொள்கிறார்களோ என்னவோ… பலர் பாக்கிராஜ் ஸ்டைல் டான்ஸ்தான் ஆடுகிறார்கள். ஆடத் தெரிந்த கேபி பெரியளவில் ஆர்வம் காட்டுவதில்லை.

பிக்பாஸ் வீட்டில் மற்றவர்களை குறை சொல்லியே பெயர் வாக்கும் நக்கீரன் இவர்தான்!

மார்னிங் டாஸ்க்கில் தமிழ் பாட்டை ஆங்கிலம் தெரிந்த ஒருவர் பாடுவதுபோல பாட வேண்டுமாம். ஆஜித் வாத்தியராகி கற்றுக்கொடுக்க, அர்ச்சனா பாடினார். வழக்கமாக, இதெல்லாம்தான் அன்சீன் காட்சிகள் என போடுவீர்கள். அதையே வழக்கமான எப்பிசோட்டிலும் போடுகிறீர்கள் என்றால், இன்றைக்கு எதுவும் நல்ல கண்டண்ட் இல்லையோ என்ற மைண்ட் வாய்ஸ் ஒலித்தது.

ரம்யாவும், அனிதாவும் ஜாலியாக உலாத்திக்கொண்டிருந்தனர். ’வேலையே இல்லாம வெட்டியா இருக்கோம்… ஏதாவது பேசுங்க’ என்று கெஞ்சினார் ரம்யா. நல்ல மூடில் இருந்த பிக்கி, ‘ரம்யா லுங்கிங் நைஸ்’ என்று தட்டிவிட, உட்சபட்ச சந்தோஷத்தில் குதித்தார். பக்கதுலதானே நானும் இருக்கேன் என்பது அனிதாவின் ரியாக்‌ஷன். பிக்கி கமெண்ட்டுக்கு ‘சத்தியமா சொல்லுங்க..’ என பதில் கமெண்ட் அடித்தார் ரியோ. அப்பறம் சோத்துல வெஷம் வைச்சிடுவார்ன்னு, ‘நானும் அப்படித்தான் நினைச்சேன் பிக்பாஸ்’னு ஜகா வாங்கிட்டார்.

பிக்பாஸ் வீட்டில் மற்றவர்களை குறை சொல்லியே பெயர் வாக்கும் நக்கீரன் இவர்தான்!

யாரிடம் அதிகப் பணம் இருக்கு என எண்ணச் சொன்னார் பிக்கி. பாலா 450 ரூபாய் வைத்திருந்தார். அவருக்கு ஸ்பெஷல் பவர் ஒண்ணு இருக்கு. அப்பறம் சொல்லறேனு சொல்லி திகைக்க வைத்தார்.

அப்பறம் டாஸ்கில் சுவாரஸ்யமான இரண்டு பேர் என தேர்வானது. ஷிவானி பெயரைப் பாலா சொல்ல, பாலா பெயரை ஷிவானி சொன்னார். பெரும்பாலானோர் சொன்னதன் அடிப்படையில் பாலா, அர்ச்சனா இருவரும் தேர்வானார்கள்.

வாரம் முழுக்க நன்றாகச் செயல்பட்ட ஒருவர் எனும்போது பலரின் சாய்ஸ் ரம்யாதான். அதனால், அடுத்த வார கேப்டன் டாஸ்கில் அவர் இருப்பார். பாலாவுக்கு கேப்டன் ஆகும் வாய்ப்பு மறுபடியும் வந்திருக்கிறது.

பிக்பாஸ் வீட்டில் மற்றவர்களை குறை சொல்லியே பெயர் வாக்கும் நக்கீரன் இவர்தான்!

அடுத்ததுதான் வில்லங்கமே… மேற்கண்ட இரண்டு பட்டியலிலும் அனிதாவின் பெயரை ஒருவர்கூட சொல்லவில்லை என்ற வருத்தத்தில் இருந்தார் அவர். சுவாரஸ்யம் குறைந்த போட்டியாளர் யார் எனக் கேட்டதும், முதலில் வந்த பாலா, முதல் பெயராக தன் பெயரைச் சொன்னதில் அப்செட்டானார். (ஆகவில்லை என்றால்தான் அது ஆச்சர்யம்) டாய்லெட் கிளீன் செய்ய இந்த 70 நாட்களில் செல்லவே இல்லை என்ற காரணத்திற்கு வழக்கம்போல விவாதம் செய்தார்.

பலரும் கேபி, ஷிவானி பெயரைச் சொல்ல, இருவரும் ஜெயிலுக்கு அனுப்பப்பட்டனர். ஆனாலும், பாலாவோடு சண்டைக்கு ரெடியாயிட்டு இருந்தார். ‘உங்களை நாமினேஷனே பண்ணக்கூடாதா?’ என எரிச்சலின் உச்சத்தில் கேட்டார் பாலா. உண்மையில் அதற்காகத்தான் அனிதா இப்படிச் செய்கிறாரோ என்று தோன்றியது. ஷிவானிக்கும் அவரை நாமினேஷன் செய்த காரணம் உடன்பாடில்லை. ஆனால், அதைப் பதிவுதான் செய்தார். வாதம் செய்ய வில்லை. அப்படிச் செய்தால் விடிய விடிய இந்த நாமினேஷன்தான் நடக்கும்.

பிக்பாஸ் வீட்டில் மற்றவர்களை குறை சொல்லியே பெயர் வாக்கும் நக்கீரன் இவர்தான்!

பாலாவைப் பற்றிய புறணியை ஆரியும் அனிதாவும் பேச, ஆரியைப் பற்றிய புறணியை பாலாவும் ரம்யாவும் ஆஜித்தும் பேசினார்கள். மற்றவர்கள் குறையைச் சொல்லிச் சொல்லியே தன்னைப் புனிதப்படுத்திக்கொள்கிறார் என்பதே ஆரியின் மீதான குற்றச்சாட்டு. இப்படி ஆடுவதுதான் தனியாக ஆடுவதென்றால் நான் குரூப்பிஸமே செய்யறேன்… என் குரூப்ல யார் யாரெல்லாம் சேர்கிறீர்கள் என்று ஆள் சேர்த்தார்.

ஆஜித்தையும், ஆரியையும் கன்ஃபெக்‌ஷன் ரூம்க்கு அழைத்து வந்து விசாரித்தார் பிக்கி. ‘நல்லா விளையாடுறீங்க’னு பிக்கி சொன்னதும் கண்ணுல ஜலம் வெச்சிட்டார் ஆரி. இதைச் சொல்ல ஆள் இல்லாமதான் சலம்பிட்டு இருக்கேன் என்று நினைத்திருப்பார்.

பிக்பாஸ் வீட்டில் மற்றவர்களை குறை சொல்லியே பெயர் வாக்கும் நக்கீரன் இவர்தான்!

கேபி, ஷிவானியும் ஜெயிலிருந்து மற்றவர்களைப் பாட்டுப்பாடி இடைஞ்சல் செய்தார்கள். ஆடியன்ஸ் மிரண்டு போய் நின்ற தருணம் அதுவாகத்தான் இருக்கும். ஜெயிலிருந்து ரிலீஸ் செய்ததும் ’அப்பாடா’ என்று ரிலாக்ஸ் ஆனது கேபியும் ஷிவானியும் மட்டுமல்ல ஆடியன்ஸூம்தான்.