ஊரடங்கில் திருச்சியில் 74 குழந்தைத் திருமண ஏற்பாடு! அதிர்ச்சி தகவல்

 

ஊரடங்கில் திருச்சியில் 74 குழந்தைத் திருமண ஏற்பாடு! அதிர்ச்சி தகவல்

சமூக மாற்றம் அல்லது சமூக முன்னேற்றம் என்பதன் முக்கியமான அடையாளம் சரியான திருமண வயதில் திருமணங்கள் நடப்பது. ஏனெனில், அப்போதுதான் குழந்தைகள் இயல்பாக வளர்வார்கள். பிறக்கும் குழந்தைகளும் ஆரோக்கியமாக இருக்கும்.

ஆனால், இன்றும் குழந்தைத் திருமணங்கள் நடக்கத்தான் செய்கின்றன. ஏதோ குக்கிராமங்களில்தான் இவை நடப்பதாக நினைப்போர்க்கு மிக அதிர்ச்சியான விஷயம் மாநகரங்களிலும் அதிகளவில் குழந்தைத் திருமணங்கள் நடக்கின்றன. அதற்கு ஓர் உதாரணம்தான் திருச்சியிலிருந்து கிடைத்திருக்கும் தகவல்.

ஊரடங்கில் திருச்சியில் 74 குழந்தைத் திருமண ஏற்பாடு! அதிர்ச்சி தகவல்

கொரோனா நோய்த் தொற்று காரணமாக திருமணங்களில் கலந்துகொள்பவர்களின் எண்ணிக்கையில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருக்கின்றன. இதனால், தங்கள் வட்டத்திற்குள் இருப்பவர்களையே திருமணத்திற்கு அழைக்கிறார்கள். எனவே, குழந்தைத் திருமணங்கள் அதிகம் நடக்கும் சூழல் இருப்பதாக தகவல்கள் கிடைக்கின்றன.

திருமண வயது பெண்ணிற்கு 18-ம், ஆணுக்கு 21 – ம் என்று சட்டத்தால் வரையறுக்கப்பட்டிருக்கிறது. இதை மீறுபவர்களுக்கு சட்டப்படி குற்றம் என்றும் தண்டனை கிடைக்கும் என்றாலும் அதிகளவு நடப்பது வியப்புக்கு உரியது.

ஊரடங்கில் திருச்சியில் 74 குழந்தைத் திருமண ஏற்பாடு! அதிர்ச்சி தகவல்

திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சியர் எஸ்.சிவராசு குழந்தைத் திருமணங்களை நடத்துபவர்களுக்கும், அதற்கு ஆதரவு அளிப்பவர்களுக்கும் கடுமையான நடவடிக்கைக்கு உட்படுத்துப்படுபவார்கள் என்று எச்சரித்தார். திருச்சிராப்பள்ளியில், ஊரடங்கு காலத்தில் 74 குழந்தைத் திருமண வழக்குகள் பதிவாகியுள்ளன. இது கடுமையான எச்சரிக்கையை வழங்க அதிகாரிகளைத் தூண்டியுள்ளது.

74 குழந்தைத் திருமண வழக்குகளில், 15 திருமணங்கள் நடத்தப்பட்ட பின்னரே பதிவாகியுள்ளன, அவர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. குழந்தைத் திருமணங்களைப் பற்றி அறிந்தால் மாவட்ட சமூக நல அலுவலர் அல்லது குழந்தைத் திருமணத் தடுப்பு அலுவலரிடம் புகார் செய்ய பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது. கட்டணமில்லா உதவி எண் 1098 இல் புகார்களையும் பதிவு செய்யலாம்.

ஊரடங்கில் திருச்சியில் 74 குழந்தைத் திருமண ஏற்பாடு! அதிர்ச்சி தகவல்

சமூக ஆர்வலர் திருமதி. சுபத்ரா கூறுகையில், சிறுமிகள் இளம் வயதிலேயே திருமணமாகும் போது அவர்கள் சந்திக்கும் பிரச்சினைகள் குறித்து மக்கள் அறிந்திருக்கவில்லை என்பது கவலைக்குரியது. அவர்கள் உளவியல் ரீதியாக திருமணத்தை எதிர்கொள்ளத் தயாராக இல்லாததால், அது திருமண வாழ்க்கையில் பல சிக்கல்களுக்கு வழிவகுக்கும். பெரும்பாலான பெண்கள் கல்வியை நிறுத்த வேண்டியிருக்கும், இது அவர்களின் எதிர்காலத்தை பாதிக்கும்.

உலகெங்கிலும் 2030க்குள் குழந்தைத் திருமணத்தின் மூலம் நடக்கும் மனித உரிமை மீறலை முடிவுக்குக் கொண்டு வருவதை ஐக்கிய நாடுகள் சபையின் நிலையான வளர்ச்சி இலக்குகள் நோக்கமாகக் கொண்டுள்ளன’ என்றார்.