அழாத அனிதா… அழுது தீர்த்த அர்ச்சனா – கன்ஃபெக்‌ஷன் ரூம் பரிதாபங்கள் #பிக்பாஸ்4

 

அழாத அனிதா… அழுது தீர்த்த அர்ச்சனா – கன்ஃபெக்‌ஷன் ரூம் பரிதாபங்கள் #பிக்பாஸ்4

பிக்பாஸ் வீட்டில் கொடுக்கப்படும் டாஸ்க்குகள் சில அங்கே விளையாடுபவர்களுக்கு உற்சாகமாகவும் கேளிக்கையாகவும் இருக்கும். ஆனால், ஆடியன்ஸ் அப்படியான மனநிலையைக் கொடுப்பதில்லை. இந்த சீசனில் காலம் கடிகாரம் டாஸ்க் அப்படித்தான். இரண்டு மூன்று நாட்கள் நடந்த அந்த டாஸ்க் எப்படா முடியும் என்றுதான் ஆடியன்ஸ் காத்திருந்தார்கள். அந்தளவு செம போர். இப்போது நடக்கும் கோழிப்பண்ணை டாஸ்க் அந்தளவு போர் இல்லை என்றாலும், முழுதாக ஆடியன்ஸ்க்கான கேமாகவும் இல்லை. கால் செண்டர் மாதிரியான டாஸ்க்குகளே போட்டியாளர்கள் – ஆடியன்ஸ் இருவருக்கும் மகிழ்ச்சிப்படுத்துவதாக அமையும். நேற்று கன்ஃபெக்‌ஷன் ரூம் பரிதாபங்கள் வேற இருந்தது. வாங்க கட்டுரையில் அவற்றைப் பார்க்கலாம்.

முந்தைய நாளின் தொடர்ச்சியாக சில விஷயங்கள் பேசிட்டு இருந்தாங்க. அது அவங்க பிரச்னை என்பதுபோல கோழிப்பண்ணை டாஸ்க் பற்றி இருந்தால் பெரிய அளவு சொல்வதற்கு இல்லை.

73-ம் நாள்

அழாத அனிதா… அழுது தீர்த்த அர்ச்சனா – கன்ஃபெக்‌ஷன் ரூம் பரிதாபங்கள் #பிக்பாஸ்4

கோழிப்பாடலை ஒலிக்க விட்டார் பிக்கியின் தம்பி. டான்ஸ் ஆடுகிறேன் என குத்தி குதறி கொத்து பரோட்டா போட்டார்கள். சேவல் மாதிரி ஆடச் சொன்னா, அர்ச்சனா அண்ட் கோ பாம்பு டான்ஸ் ஆடிட்டு இருந்தாங்க. ரம்யா – ஷிவானி டான்ஸ் கூட்டணி மறுபடியும் சேர்ந்துடுச்சு.

கோழிப்பண்டை டாஸ்க் ஆரம்பித்ததும் ஒரே கூச்சல்தான். தியேட்டரில் எடுத்த திருட்டு விசிடியில் படம் பார்க்கும்போது ஆடியன்ஸ் பேசறதெல்லாம் கேட்குமே அதுபோல கசகசன்னு இருந்துச்சு.

அர்ச்சனா இந்த டாஸ்க்கை இன்னும் சுவாரஸ்யமாகக் கொண்டு போகணும்னு என்ன செய்தார் தெரியுமா? முட்டை மீது படுத்துக்கொண்டார். இது என்ன உத்தி என்றே புரியவில்லை. ஆனாலும், எப்படியும் ஒரு சண்டை கன்ஃபார்ம் என பிக்கி ஹாப்பியாயிட்டார்.

அழாத அனிதா… அழுது தீர்த்த அர்ச்சனா – கன்ஃபெக்‌ஷன் ரூம் பரிதாபங்கள் #பிக்பாஸ்4

பிக்கி நினைத்ததுபோல, ரியோ கையை நுழைத்து தொட்டுட்டேன் எனச் சொன்னார். அதன்பின், சோம் கையை நுழைத்து எடுக்கையில் முட்டை உடைந்துவிட்டது. மேலே படுத்து அர்ச்சனா உடைத்ததாகவும், கையை விட்டு சோம் உடைத்ததாகவும் இரு தரப்பில் சொல்லப்பட்டன. இந்த விவகாரத்துக்குத்தான் நாங்க கிட்டேயே வரல என்று ஆரியும் பாலாவும் ஒதுங்கி நின்றிருந்தார்கள்.

இந்த விஷயத்தில் பிக்பாஸே தலையிட்டு சரியான நீதியைச் சொல்ல முடியாது. அர்ச்சனா அந்த முட்டையை முழுக்க மறைத்துக்கொண்டிருந்தார். அதனால், உடைத்தது யார் என்று தெரிந்த ஒரே நபர் அர்ச்சனா மட்டுமே.

ரியோ – சோம்ஸ் இருவரில் பணத்தை யாருக்குக் கொடுப்பது என்ற குழப்பம் அர்ச்சனாவுக்கு. சோம்ஸ்க்கு கொடுக்கச் செல்ல, ரியோவும் கேட்க, யோசித்து, சண்டை போட்டு ரியோவிடமே கொடுக்க, அவர் சோம்ஸிடம் கொடுத்தார். இதுக்கு அர்ச்சனாவே நேரடியா கொடுக்க விட்டிருக்கலாமே ரியோ.

அழாத அனிதா… அழுது தீர்த்த அர்ச்சனா – கன்ஃபெக்‌ஷன் ரூம் பரிதாபங்கள் #பிக்பாஸ்4

முட்டையைத் தொடுவதில் ஒவ்வொரு முறையும் சண்டை. முன்பகுதியிலேயே சொன்னதுபோல ஆடியன்ஸ்க்கு ஏதோ சண்டை, களேபாரமாக இருக்கு என்பதுதான் கன்வே ஆனது. ஆனால், சும்மாவே கிடந்த இந்த சீசனில் இதுவாவது நடக்குதேன்னு நினைச்சுக்க வேண்டியதுதான்.

அர்ச்சனா டக்டக்கென்று வார்த்தைகளை விட்டுடுறார். முந்தா நாள் சோம்ஸைப் பார்த்து ‘மாமா நீ’ என்றதும் சரி, நேற்று, ‘நரியா இருந்தாலும் மானஸ்தனா இருக்கணும்னு சொன்னதும் சரி வெளியே பேசுவதுபோல சொல்லிவிடுகிறார். நீங்க நீங்களா இருங்க… என்று சொன்னாலும் நிஜத்துக்கும் பிக்பாஸ் வீட்டுக்கும் மெல்லிய அழுத்தமான கோடு இருக்கு. அதைப் புரிஞ்சுக்கிறவங்களே பிஸ்தா.

அதிக பணம் வைத்திருப்பவர்களுக்கு ஸ்பெஷல் பவர் கொடுக்கப்படும் என்று சொன்னதே, போட்டியாளர்களை தலைத் தெறிக்க டாஸ்க் செய்ய வைத்திருக்கிறது. ரம்யாகூட கோபமாக ஆரியோடு சண்டை போட்டுட்டு இருந்தார். ஆனால், நிதானமாகக் கோபப்பட ரம்யாவிடம்தான் கற்றுக்கொள்ள வேண்டும்.

அழாத அனிதா… அழுது தீர்த்த அர்ச்சனா – கன்ஃபெக்‌ஷன் ரூம் பரிதாபங்கள் #பிக்பாஸ்4

அனிதாவை கன்ஃபெக்‌ஷன் ரூம்க்கு அழைத்து குசலம் விசாரித்தார் பிக்கி. வீட்டைப் பற்றி, யாரை மிஸ் பண்றீங்கன்னு மாத்தி மாத்தி கேட்டாலும் அனிதா அழுவதுபோல தெரியல. வழக்கமா, ஹலோ சொன்னாலே அழுதுடுவாரே என்னாச்சு இந்த அனிதாவுக்குனு யோசிச்சிருப்பார். இன்னும் பயிற்சி வேண்டுமா? இது பிக்கியின் மைண்ட் வாய்ஸ். அழ வைக்க முடியலைன்னு தன் தோல்வியை ஒத்துக்கொண்ட பிக்கி, போய்ட்டு வாங்க கன்னுக்குட்டின்னு கடைசி ஆயுதத்தை பிரயோகித்தார். ம்ஹூம். சிரிச்சுகிட்டே தேங்க்ஸ் சொல்லிட்டு வந்தார் அனிதா. என்னவோ மாற்றம் நடந்திருக்கு.

அடுத்து கன்ஃபெக்‌ஷன் ரூம்க்கு அழைக்கப்பட்டவர் அர்ச்சனா. இந்த முறை ஏமாந்துவிடக்கூடாது என நினைத்த பிக்கி, மைண்ட் டூர் அழைச்சிட்டு போக ப்ளான் பண்ணினார். கண்ணை மூட வைத்து, அர்ச்சனாவை வீட்டுக்குள் அழைத்துச் செல்வதாகக் காட்சிகளை விவரிக்க, கண்ணீரைக் கொட்டித் தீர்த்தார். ’இனிமேதான் இருக்கு என் ஆட்டம்’ என 98 வது முறையாக சபதம் எடுத்தார். ‘ஓஹோ’என்று இம்முறையும் பிக்கி அதை நம்பினார்.

அழாத அனிதா… அழுது தீர்த்த அர்ச்சனா – கன்ஃபெக்‌ஷன் ரூம் பரிதாபங்கள் #பிக்பாஸ்4

பிக்கிக்கே யாரையாவது அழ வைத்தால்தான் பேட்டா போலிருக்கு. இன்றைய கோட்டோ முடிந்த சந்தோஷத்தில் எண்ட் கார்டைப் போட்டார் பிக்கி.