இணையத்தில் கவனம் பெற்ற திருமண விளம்பரம்!

 

இணையத்தில் கவனம் பெற்ற திருமண விளம்பரம்!

இரண்டாவது திருமணம் செய்துகொள்வதற்காக நாளிதழில் விளம்பரம் கொடுத்துள்ளார் மைசூருவை சேர்ந்த 73 வயது மூதாட்டி.

கர்நாடக மாநிலம் மைசூருவை சேர்ந்த மூதாட்டி ஒருவர் ஆசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவர் கடந்த சில தினங்களுக்கு முன் கன்னட செய்தித்தாள் ஒன்றில் தனக்கு மணமகன் தேவை என விளம்பரம் கொடுத்தார்.

இணையத்தில் கவனம் பெற்ற திருமண விளம்பரம்!

அதில், பல ஆண்டுகளாக தனியாக வாழ்ந்த நிலையில் இரண்டாவது திருமணம் செய்துகொள்ள விரும்புவதாகவும், அதற்கு தன்னை விட மூத்த, நல்ல ஆரோக்கியமான உடல்நிலையை கொண்ட‌ மணமகன் தேவை. கட்டாயம் பிராமணராக இருத்தல் வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில் மைசூருவை சேர்ந்த 73 வயது மூதாட்டி நாளிதழில் கொடுத்த விளம்பரத்திற்கு பதில் கிடைத்துள்ளது. அந்த விளம்பரத்தை பார்த்து திருமணத்திற்கு விருப்பம் தெரிவித்த 69 வயது முதியவர் தான் அந்த மூதாட்டியை திருமணம் செய்து கொள்ள விரும்புவதாக தெரிவித்துள்ளார்.