72 ஆவது குடியரசு தினவிழா : முதல் முறையாக வங்கதேச ராணுவம் பங்கேற்பு!

72 ஆவது குடியரசு தினவிழா :  முதல் முறையாக வங்கதேச ராணுவம் பங்கேற்பு!

நாடு முழுவதும் 72 ஆவது குடியரசு தின விழா இன்று கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.

72 ஆவது குடியரசு தினவிழா :  முதல் முறையாக வங்கதேச ராணுவம் பங்கேற்பு!

72 ஆவது குடியரசு தின விழாயொட்டி டெல்லியில் தேசிய கொடியை ஏற்றி வைத்து அணிவகுப்பு மரியாதையை ஏற்கிறார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த். குடியரசு தினவிழாவையொட்டி ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள், பூங்காக்கள் போன்றவற்றில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அத்துடன் அச்சுறுத்தல் காரணமாக கட்டுப்பாடுகளுடன் குடியரசு தின விழா நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. குடியரசு தின விழாவில் ராணுவ வீரர்களின் மோட்டார் வாகன சாகச நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. கொரோனா அச்சுறுத்தலால் நிகழ்ச்சிகளை காண 1.25 லட்சம் பேருக்கு பதில் 25 ஆயிரம் பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

72 ஆவது குடியரசு தினவிழா :  முதல் முறையாக வங்கதேச ராணுவம் பங்கேற்பு!

அதேபோல் டெல்லியில் இந்திய குடியரசு தின விழா அணிவகுப்பில் முதல் முறையாக வங்கதேச ராணுவம் பங்கேற்கிறது. வங்கதேசம் உருவாகி ஐம்பது ஆண்டுகள் நிறைவடைந்ததை கொண்டாடும் வகையில் அந்நாட்டு ராணுவம் பங்கேற்கிறது. வங்கதேச ராணுவ கமாண்டர் அபு முகமது ஷாஹ்னூர் ஷாவோன் தலைமையில் 122 வீரர்கள் பங்கேற்கின்றனர். இந்தியா-வங்கதேசம் இடையே இராஜதந்திர உறவுகள் தொடங்கப்பட்டு 50 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன.