’கிச்சன் டீம் வேணாம் – இது ஷிவானி’ ‘இதுதான் காரணம்’ விளக்கும் கேபிரியல்லா – பிக்பாஸ்72 நாள்

 

’கிச்சன் டீம் வேணாம் – இது ஷிவானி’ ‘இதுதான் காரணம்’ விளக்கும் கேபிரியல்லா – பிக்பாஸ்72 நாள்

பிக்பாஸ் பற்றிய இந்தத் தொடரில் சில வாரங்களுக்கு முன் ஒரு டாஸ்க் பற்றி எழுதும்போது, ’இந்த சீசன் போட்டியாளர்கள் எவ்வளவு சுவாரஸ்யமான டாஸ்க் கொடுத்தாலும், அதை மொக்கையாக்கி விடுகிறார்கள்’ என்று எழுதியிருந்தேன். அதற்கு இன்னோர் உதாரணமாக அமைந்தது நேற்றைய எப்பிசோட். எப்படி என்பதைக் கட்டுரையில் விரிவாகப் பார்ப்போம்.

பிக்பாஸ் 72-ம் நாள்

‘கொக்கரக்கோ’ என்று கொடுக்கவிருக்கும் டாஸ்க்கை மனத்தில் வைத்து பிக்கியின் தம்பி வேக்கப் சாங்கை ஒலிக்க விட்டார். ரம்யாவோடு ஜோடியாக ஆடும் ஷிவானி, நேற்று தன்னை ரம்யா நாமினேட் பண்ணியதால் விலகி வேறொரு குழுவில் சேர்ந்து ஆடிக்கொண்டிருந்தார். அதனால் என்ன என்று ரம்யா அனிதாவோடு ஜோடி சேர்ந்தார்.

’கிச்சன் டீம் வேணாம் – இது ஷிவானி’ ‘இதுதான் காரணம்’ விளக்கும் கேபிரியல்லா – பிக்பாஸ்72 நாள்

ஆட்கள் குறைந்துகொண்டே வருவதால், டீம்களிலும் அது எதிரொலித்தது. கிச்சன் மற்றும் பாத்திரம் கழுவுவது என்பதை ஒரே அணியாக மாற்றியிருந்தார்கள். இதில் ஷிவானிக்குக் குழப்பமாக இருந்ததாம். அதை அவர் சொல்லும்போது நமக்கே குழப்பம்தான். அவரின் கோரிக்கை பாத்திரம் கழுவுவது மட்டுமே நான் இருக்கிறேன் என்பதுதான். அதனால், ஆஜித்தைச் சேர்த்து பாத்திரம் கழுவ தனி டீம் அமைத்தார்.

அப்படியும் ஒரு சந்தேகம் ஷிவானிக்கு வர, அர்ச்சனாவை அழைத்து எப்போதெல்லாம் பாத்திரம் வரும் எனக் கேட்க, அவர் மூன்று வேளை சாப்பாடு, இரு வேளை காபி என ஐந்து முறைகள் பாத்திரங்கள் கழுவ வேண்டியிருக்கும் என்றார். என்ன ஒரு கணக்கு. அதுக்கும் சிணுங்கினர் ஷிவானியும் ஆஜித்தும். இதை பாலாவால் பொறுத்துக்கொள்ள முடியுமா?

’கிச்சன் டீம் வேணாம் – இது ஷிவானி’ ‘இதுதான் காரணம்’ விளக்கும் கேபிரியல்லா – பிக்பாஸ்72 நாள்

‘ஷாலினி எனி ஹெல்ப்’ என உள்ளே நுழைந்து மதியம் நான் உதவிசெய்கிறேன் என்றார். உடனே ரம்யாவும் மாலையில் நான் உதவுகிறேன் என்றார். உடனே ஷிவானி, ‘ஓ! நீங்க ரெண்டு முறை என்றால்.. அப்ப மூன்று வேளைகள்தானா?’ என்று எஸ்ஸானது சான்ஸே இல்லை.

ஆனால், ஷிவானியின் பிரச்சனை என்னவென்று சரியாகச் சொன்னது கேபிதான். கிச்சன் + பாத்திரம் கழுவுதல் ஒரே அணியாக இருப்பதால் நீண்ட நேரம் அங்கேயே இருக்க வேண்டியிருக்கும். ஷிவானி வேறொரு இடத்தில் டைம் செலவழிக்க முடியாமல் போய்விடும் அல்லது குறைவாக அங்கே இருக்க முடியும் (எங்கே… யாருடன் என்பதைத் தனியே சொல்ல வேண்டுமா என்ன?) அதனால் ஷிவானி பின் வாங்குகிறார். கேபிக்குள் இத்தனை தெளிவா?

எல்லோரையும் அழைத்து டீம் குறித்த விளக்கங்களைச் சொல்லிக்கொண்டிருந்தார். உடனே ஆரி ‘உதவி செய்வதை வைத்தெல்லாம் பெஸ்ட், வொஸ்ட் முடிவெடுக்கக் கூடாது என முன் ஜாமீன் கேட்க அது களே பாரமாகிற்று.

’கிச்சன் டீம் வேணாம் – இது ஷிவானி’ ‘இதுதான் காரணம்’ விளக்கும் கேபிரியல்லா – பிக்பாஸ்72 நாள்

கோழிப்பண்ணை எனும் புதிய டாஸ்க்கை அறிவித்தார் பிக்கி. அதை ரியோ படிக்கும்போதே நமக்கு விளங்கிவிட்டது… இதில் பலர் சந்தேகம் கேட்டு சாகடிக்க போகிறார்கள் என்று.
டாஸ்க்கின் சுருக்கம் இதுதான்… இருவருக்கு முட்டைகள் அனுப்பி வைப்பார்கள். அவர்கள் கோழிகள். மற்றவர்கள் நரிகள். நரிகளில் ஒருவர் அந்த முட்டை மீது கை வைத்துவிட்டால் முட்டை வைத்திருப்பவர் ஆட்டமிழப்பார். அதற்குப் பதில் நரியின் வாலை அவர் இழுத்து விட்டால் நரி ஆட்டமிழக்கும். முட்டை வைத்திருப்பவரிடம் 200 ரூபாய் பணம் இருக்கும். அதை வைத்து நரியிடம் ஒப்பந்தம் போட்டு முட்டையை எடுக்காமல் பாதுகாக்கலாம்.

இதில் கோழியின் வேலை முட்டையைப் பாதுகாப்பது. ஆனால், பல கோழிகள் என் முட்டையை நீ உடைச்சிடு ஆளுக்கு 100 ரூபாய் எடுத்துக்கலாம் என்று வித்தியாசமாகத் திட்டம் போட்டன. இதை ஒழுங்காகக் கணித்தது ரியோதான்.

’கிச்சன் டீம் வேணாம் – இது ஷிவானி’ ‘இதுதான் காரணம்’ விளக்கும் கேபிரியல்லா – பிக்பாஸ்72 நாள்

எல்லா டாஸ்க்கில் புது பிரச்சனை கொண்டு வருவது பாலாவின் வழக்கம். இதிலும், முட்டை மேலேயே உட்கார்ந்து முட்டையை உடைத்துவிட்டார். ஆளுக்கொன்று என்ற கணக்கில்தான் பிக்கி தயார் பண்ணி வைத்திருப்பார் போல. அதனால அவரே டென்ஷனாகி, அவ்வளவுதான் போய் நீ நரியாகி கொள் எனக் கடுப்போடு சொன்னார்.

ஒவ்வொருவராகச் செல்ல வேண்டும்… சொல்லிவிட்டு வர வேண்டும்… ஒப்பந்தம் மீறக்கூடாது… நரியின் வாலை முன்கூட்டியே இழுக்கக்கூடாது… பெல் அடிப்பதற்குள் அருகில் வந்து நிற்கக் கூடாது… என ஒவ்வொன்றுக்கும் ஒரு சண்டை வந்தது. ஒவ்வொரு சண்டையின்போதும் ஒவ்வொரு விதமாக விதிகள் அமைக்கப்பட்டன.

கூட்டமாக வந்தால் வயலன்ஸாகி விடும் என்று ஆரி எச்சரித்துக்கொண்டே இருக்கிறார். அனிதா முட்டையை உடைக்கச் சென்று கீழே விழுந்து அடிபட்டார். அன்பாக விளையாடலாமே என்று இதில் அன்பை பாய்த்துக்கொண்டிருந்தார் அர்ச்சனா. ரூல்ஸ் இருப்பதை மறந்துட்டீங்களா என்று ஞாபகப் படுத்திக்கொண்டே இருந்தார்.

’கிச்சன் டீம் வேணாம் – இது ஷிவானி’ ‘இதுதான் காரணம்’ விளக்கும் கேபிரியல்லா – பிக்பாஸ்72 நாள்

அனிதா நாமினேஷனில் இருப்பதால் இந்த வாரம் அவரின் சத்தம் குறைவாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. ஒருவேளை நாமினேஷனில் இல்லையெனில், நேற்றைய விதி அமைப்புகளில் குறுக்கே புகுந்து ரகளை கட்டியிருப்பார்.

தீவிரமான ஒரு டிஸ்கஸனில், ‘எந்த நரி முன்னே செல்ல வேண்டும் என்பது நரிகளுக்குத் தெரியணும். ஆனா, கோழிக்குத் தெரியக்கூடாது… அவ்வளவுதான்’ என்று சொல்லி முடித்த அடுத்த நொடியில் பிக்கி எண்ட் கார்டு போட்டார். பிக்கியே ரம்யா ஆர்மியில் இருக்கார் போல.