72 ஆண்டுகளாக மின்சாரமே இல்லாத கிராமம்! கரண்ட்க்கு ஸ்பெல்லிங் கூட தெரியாதுங்க… 

72 ஆண்டுகளாக மின்சாரமே இல்லாத கிராமம்! கரண்ட்க்கு ஸ்பெல்லிங் கூட தெரியாதுங்க… 

இந்தியா சுதந்திரம் அடைந்ததிலிருந்தே சத்தீஷ்கர் மாநிலத்தில் உள்ள ஒரு கிராமத்திற்கு மின்சாரம் வழங்கப்படவில்லை என்பது தெரியவந்துள்ளது. 

இந்தியா சுதந்திரம் அடைந்ததிலிருந்தே சத்தீஷ்கர் மாநிலத்தில் உள்ள ஒரு கிராமத்திற்கு மின்சாரம் வழங்கப்படவில்லை என்பது தெரியவந்துள்ளது. 

திரிசூழி என்ற கிராமத்தில்தான் இந்த அவலம். நூற்றுக்கும் மேற்பட்டோர் வசித்துவரும் இந்த கிராமத்தில் ஏராளமானோர் விவசாய தொழிலையே நம்பியுள்னர். கடந்த 70 ஆண்டுகளுக்குக்கும் மேலாக இந்த கிராமத்தில் மின்சாரம் வழங்கப்படவில்லை. இதனால் திரிசூழி கிராமத்தில் வசிப்பவர்களின் வீடுகளில் மின் சாதனங்களும் கிடையாது. பகலில் கூலி வேலைக்கு சென்றுவிடும் இந்த கிராமத்து மக்கள், இரவு நேரங்களில் பாம்பு, தேள் போன்ற பூச்சிகளுடன் தான் குடும்பம் நடத்துக்கின்றனர்.

இங்குள்ள மாணவர்கள், இரவு நேரங்களில் படிப்பதற்கு மெழுகுவர்த்தி மற்றும் மண்ணெணெய் விளக்குகளையே நம்பியுள்ளனர். மேலும் மின்சாரம் இல்லாததால் தண்ணீர் பயன்படுத்த மோட்டார் பயன்படுத்த முடியாமல் தவிக்கும் திரிசூழி கிராமமக்கள் அருகில் உள்ள குளத்தில் இருந்து தான் நீரை எடுத்து பயன்படுத்துகிறார்கள். தங்கள் கிராமத்திற்கு மின்சார வசதி வழங்கக்கோரி அரசிடம் பலமுறை கோரிக்கை வைத்தும், எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை என கூறுகின்றனர்.