72வது இந்திய ராணுவ தினம்: நாட்டின் ரியல் ஹீரோக்களுக்கு ‘சல்யூட்’ !

 

72வது இந்திய ராணுவ தினம்: நாட்டின் ரியல் ஹீரோக்களுக்கு  ‘சல்யூட்’ !

உன்னத நாளை கொண்டாடும் விதமாகவே  இன்று  இந்திய ராணுவ தினம் கொண்டாடப்படுகிறது. 

ஆங்கிலேயர்கள் ஆட்சியில் ராணுவ தலைமை பொறுப்பு அவர்களின் வசமே இருந்தது. சுதந்திர இந்தியாவாக மாறிய போதும் இரண்டு ஆண்டுகள் கழித்து  1949 ஜன.,15ல் இப்பொறுப்பை ஆங்கிலேயர் ராய் பட்சரிடம் இருந்து இந்தியாவின் கரியப்பா ஏற்றார்.  இந்த உன்னத நாளை கொண்டாடும் விதமாகவே  இன்று  இந்திய ராணுவ தினம் கொண்டாடப்படுகிறது. 

ttn

ராணுவ வீரர்களின் எண்ணிக்கையில் இரண்டாவது இடத்தில் இந்தியா உள்ளது. ஒட்டுமொத்தமாக உலகில் நான்காவது பெரிய ராணுவமாக இந்தியா திகழ்கிறது. ராணுவத்தில் 14 லட்சத்துக்கு மேற்பட்ட வீரர்கள் உள்ளனர். முப்படைகளின் தலைவர் ஜனாதிபதி. சமீபத்தில் முப்படைகளுக்கும் சேர்த்து தலைமை தளபதி பதவியை பிபின் ராவத் ஏற்றார். இந்திய ராணுவத்தில் தரைப்படை, கப்பற்படை, விமானப்படை, கடலோர காவல்படை, துணை ராணுவப்படை என ஐந்து படைப்பிரிவுகள் உள்ளன. இதற்கான கட்டளைகளைப் பிரதமர் தலைமையிலான அமைச்சரவை குழு மற்றும் ராணுவ அமைச்சகம் கொடுக்கிறது.

ttn

மழை, புயல், பனி எந்த காலத்தையும் பொருட்படுத்தாது சுயநலமின்றி நாட்டுக்காகப் பாடுபடும் உண்மையான ஹீரோக்கள் தான் நம் ராணுவ வீரர்கள்.  பல இன்னல்களுக்கும் மத்தியில் நாம் வாழ, அவர்களின் உயிர்களை தியாகம் செய்கிறார்கள். அதனால் ராணுவ வீரர்களையும் அவர்களின் தியாகங்களையும் இன்று மட்டுமல்லாது இனிவரும் அனைத்து  காலங்களிலும் நினைவு கூர்வோம்.