• February
    25
    Tuesday

Main Area

Main



குடியரசு தின விழா நாளை கொண்டாட்டம்: நாடு முழுவதும் உச்சகட்ட பாதுகாப்பு!

குடியரசு தினவிழா
குடியரசு தினவிழா

நாடு முழுவதும் 71வது குடியரசு தினவிழா ஜனவரி 26-ம் தேதி (நாளை) உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. மாநிலங்களின் தலைநகரங்களில் நடைபெறும் விழாவில்  அந்தந்த மாநில ஆளுநர்கள் தேசியக் கொடி ஏற்றி அணிவகுப்பு மரியாதையை ஏற்கின்றனர்.

tn

டெல்லியில் நடைபெறும் விழாவில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் மூவர்ண கொடியேற்றுகிறார். அதன் பின்னர், வரலாற்று சிறப்புமிக்க ராஜபாதையில் கலை நிகழ்ச்சிகளும்,  வீரதீர செயல்களும், ராணுவத்தின் பலத்தை பறைசாற்றும் வகையில் பல்வேறு படைப்பிரிவுகளின் அணிவகுப்புகளும் நடைபெறும். ராணுவ வீரர்கள், கடற்படை மற்றும் விமானப்படை வீரர்களின் கண்கவர் அணிவகுப்பு மரியாதையை குடியரசுத் தலைவர் ஏற்றுக்கொள்கிறார். 

ttn

பல்வேறு மாநிலங்களின் கண்கவர் வாகனங்களும் அணிவகுத்து வரவுள்ளன. தமிழக அரசின் சார்பில் அய்யனார் கோயில் கொடை விழா போன்ற காட்சி அமைப்பு அணி வகுப்பில் இடம் பெறவுள்ளது. இந்த நிகழ்ச்சியை காண உள்நாடு மற்றும் வெளிநாடுகளிலிருந்து ஏராளமானோர் டெல்லியில் குவிந்துள்ளனர். 

ttn

குடியரசு தின அணிவகுப்பு நடக்கும், ராஜபாதை முழுவதும், போலீசாரின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளது. அசம்பாவிதங்களை தடுக்கும் பொருட்டு தில்லியில் உச்சகட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 15 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். ஆயுதம் ஏந்திய வீரர்கள் டெல்லி மற்றும் புறநகர் பகுதிகளில் குவிக்கப்பட்டு உள்ளனர். மக்கள் அதிகம் கூடும் இடங்களில், கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அதேபோல் டெல்லிக்கு ரயில் மூலம் வரும் பார்சல் சர்வீஸ்க்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 
 

2018 TopTamilNews. All rights reserved.