பிக் பாஸ் வீட்டின் கணக்குப் பிள்ளைகள் இவர்கள்தாம்! பிக்பாஸ்4

 

பிக் பாஸ் வீட்டின் கணக்குப் பிள்ளைகள் இவர்கள்தாம்! பிக்பாஸ்4

திங்கள் கிழமை பிக்பாஸ் எப்பிசோட் எப்போதும் ரணகளமாகத்தான் இருக்கும். காரணம், நாமினேஷன் பிராசஸ் இருக்கும் இல்லையா? அதான். நேற்றைய எப்பிசோட்டிலும் அது இருந்து. கூடவே சூடான சண்டைகளும் இருந்தன. விரிவாகக் கட்டுரையில் பார்ப்போம்.

பிக்பாச் 71-ம் நாள்

வழக்கமான ஆட்டம் பாட்டத்திற்கு பிறகு, எந்த டாஸ்க்கும் இல்லை என்பதால், இரண்டு குரூப்களும் தனித்தனியே உட்கார்ந்து தீவிர ஆலோசனையில் இருந்தன. முதன்நாள் விஷயங்களைப் பேசிக்கொண்டிருந்தார்கள்.

’சரி, சரி.. போதும். நாமினேஷன் வேலை இருக்கு… வாங்க’ என பிக்கியின் கட்டளைக்குக் கீழ் படிந்தார்கள். ஏற்கெனவே அர்ச்சனா குரூப்க்கும் பாலா குரூப்க்கும் எரிந்துகொண்டிருக்கிறது. இதில் பெட்ரோலை ஊற்றுவிதமாக ஓப்பன் நாமினேஷனை வைத்தார் பிக்கி.

பிக் பாஸ் வீட்டின் கணக்குப் பிள்ளைகள் இவர்கள்தாம்! பிக்பாஸ்4

இதைத்தான் ரொம்ப நாளா எதிர்பார்த்திட்டு இருந்தேன் என்றார் பாலா. முகம் சுளித்தார் ரியோ. ஓஹோ அப்படியான்னு ரியாக்ட் பண்ணினார் அர்ச்சனா. ‘பார்த்தியா இந்த பய புள்ளைய’என்பதாக வில்லங்க சிரிப்பை உதிர்த்தார் அனிதா. வழக்கம்போல, வாயை மூடி பின்பக்கம் சாய்ந்து அழகாகச் சிரித்தார் ரம்யா.

பாலா அண்ட் கோ ரியோவையும் அர்ச்சனாவையும் குறித்து வைத்து நாமினேஷன் செய்தார்கள். அர்ச்சனா குரூப், ஆரியையும் அனிதாவையும் குறி வைத்தார்கள். ரம்யா மட்டும் அந்த குருப்புக்கு ஒரு ஓட்டும், இந்த குருப்புக்கு ஒரு ஓட்டு என ஷிவானிக்கும் ரியோவுக்கும் ஓட்டு குத்தினார். ஆஜித்க்கும் சில ஓட்டுகள் விழுந்தன.

பிக் பாஸ் வீட்டின் கணக்குப் பிள்ளைகள் இவர்கள்தாம்! பிக்பாஸ்4

ரியோ மட்டும் அனிதாவைப் பற்றிய நீண்ட விளக்கம் கொடுத்து, நான் அவங்கள நாமினேஷன் பண்ணல, பாலாவை நாமினேஷன் செய்யறேன் என்றார். சண்டைக்கு நீங்களே இழுத்து விடுகிறீங்களேன்னு தயாரானார் அனிதா.

சரியாக, நாமினேஷன் முடிந்ததும் ‘ஏன் அப்படிச் சொன்னீங்க?’னு அனிதா விளக்கம் கேட்டு சண்டையைத் தொடங்கி வைத்தார். ரியோ சொன்னது சண்டைக்கான விஷயம் அல்ல, 12 பேருக்கு ஒரே ஆளாக சமைத்தது தேவையில்லை. உதவிக்கு கூப்பிட்டிருந்தால் வந்திருப்பார்கள். அது அவ்வளவு பெரிய சீன் இல்லை’ என்பதுதான். ஆனால், அனிதாவா விடுவார்.

ஒரு கட்டத்தில் ‘எங்கே பயந்துட்டு ஓடுறீங்க’னு கேட்டு, எரிச்சலூட்டினார். ரியோ கடுப்பில் கத்த ஆரம்பித்து விட, அமைதியானார் அனிதா. அனிதாவின் வழக்கமான குணம் ஒன்று, நாமினேஷனில் அவர் பெயர் வந்துவிட்டால் அது மாறிவிடும். அந்த வாரம் முழுக்க சண்டை போடாமல் இருக்க முடிந்தளவு முயற்சி செய்வார். அதை இந்த வாரமும் செய்தார்.

பிக் பாஸ் வீட்டின் கணக்குப் பிள்ளைகள் இவர்கள்தாம்! பிக்பாஸ்4

நாமினேஷன் முடிந்ததும் அனிதா, ஆரி, பாலா, ஷிவானி, ரம்யா குரூப் கூட்டமாக உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தார்கள். அதில் ஆரி இவர்கள் எல்லாம் இவரை நாமினேஷன் செய்தார்கள். அவர்கள் எல்லாம் இவரை நாமினேஷன் செய்தார்கள். ரியோவைச் சொன்னதும் இவர்கள் குத்துகிறார்கள். பிள்ளையார் கோவிலில் 108 தேங்காய் உடைக்கிறார்கள்… என காம்பவுண்டைத் தாண்டியும் கணக்குப் போட்டுக்கொண்டிருந்தார். இந்த வீட்டின் முதல் கணக்குப் பிள்ளை ஆரிதான். அடுத்தது அனிதா.

உண்மையில் இவர்கள் இந்த கணக்கையே போட்டுக்கொண்டிருந்தால் எப்படி விளையாட்டை ஆடுவார்கள். அதையே அர்ச்சனா வேறு வகையில் கேட்டார். சூழ்ச்சி செய்தும் சண்டை போட்டும்தான் இங்கே இருக்கனுமா… அன்பா, விளையாடிக்கொண்டும் இருக்க முடியாதா? என்று. ஆனால், சோம்ஸ், ‘அன்பு வேணாம்’ என்று சொல்ல, ஏன்… ஏன்? என அர்ச்சனா பிடிக்க, ‘ஏன்ன்னா, அன்பு அவங்க வீட்டுல வேலை செய்யும் அன்பு அண்ணன். அதனால அவங்களுக்குப் பிடிக்காது’னு ஜோக் (!) அடித்தார். வறண்ட ஊரில் பெய்த மழையாக அதை ஜோக் என நினைத்து கொண்டாடினார் அர்ச்சனா.

பிக் பாஸ் வீட்டின் கணக்குப் பிள்ளைகள் இவர்கள்தாம்! பிக்பாஸ்4

இந்த நாமினேஷன் இருக்கே… ரியோவோடு ஓவராக போயிட்டோமா என்று அனிதாவை உறுத்த, ஆயிரம் ஓட்டு இதனால குறைஞ்சிட்டா என்ன செய்யறதுன்னு சோம்ஸை தூது அனுப்பினார். ஆனால், அதை சொல்ல சென்றபோது அர்ச்சனா, சோம்ஸை ‘மாமா’ என்று கமெண்ட் செய்தது ரொம்பவே தப்பு. கமல் பஞ்சாயத்தில் ஏகப்பட்ட ஸாரி கேட்க வைக்கப்படுவார். ரியோவை வர வழைத்தார். ‘நான் கூப்பிட்டா, பேச முடியாது’னு ஒதுங்கிடுவார்னு ரியோ பற்றி கணிப்பைச் சொல்லியிருந்தார். ஆனால், ரியோவே வந்து பேச ஆரம்பித்தார்.

இப்படித்தான் ரியோவை தனக்கு எதிரியாக்க அனிதா முயல்கிறாரோ என்ற எண்ணம் வருவது ரசிகர்களுக்கு. ‘உங்களை எதிர்த்தால் வெளியே போய்டுவாங்க.. உங்க ரசிகர்கள் அதை செய்யறாங்க’னு அனிதா பெரிய ஜோக்கைச் சொல்ல, ‘இல்ல அனிதா, உங்களை எதிர்த்தால்தான் வெளியே போவாங்க’னு சுரேஷ், சம்யுக்தா, நிஷா என பெரிய பட்டியலைப் போட்டார் ரியோ. உடனே சிரித்தார் அனிதா. ஆனால், இது நிச்சயம் வேற இடத்தில் சண்டையாக மாறக்கூடும். ஒருவழியாக சமாதானம் ஆனார்கள். அனிதா நாமினேஷனில் இல்லையெனில் இது நிச்சயம் நடந்திருக்காது.

ஷிவானியைக் கூப்பிட்டு கன்ஃபெக்‌ஷன் ரூமில் விசாரித்தார் பிக்கி. வீட்டை, அம்மாவை மிஸ் பண்ணுவதாகச் சொல்லி அழுதார். ஒவ்வொரு எவிக்‌ஷன்போதும் கடைசியாக தம் பெயர் வருவதால் டிப்ரஸன் ஆவதாகவும் அதைக் கையாள தெரியவில்லை என்று சொன்னார். யாரையும் நம்பி அழ முடியவில்லை என்று வருத்தப்பட்டார். உண்மையில் இந்த மடியைத்தான் அர்ச்சனா அண்ட் கோ மற்றவர்களுக்குத் தருகிறது என்று தோன்கிறது.

பிக் பாஸ் வீட்டின் கணக்குப் பிள்ளைகள் இவர்கள்தாம்! பிக்பாஸ்4

ரியோவிடம் கதாகாலட்சேபம் நடத்திக்கொண்டிருந்த ரியோவை கன்ஃபெக்‌ஷன் ரூம்க்கு அழைத்தார் பிக்கி. ‘சுவரைப் பிடித்து தத்தித் தத்தி நடக்கறா உங்க மகள்… முதன்முறையாக ’அப்பா’ என்று அழைத்தார் என்று பிக்கி சொல்ல சொல்ல, அழக்கூடாது என்று வீம்பாக இருந்த ரியோ உடைந்து அழுதார். ‘உடனே அவங்களைப் பார்க்கணும்னு என்று சொன்னதில் ப்ரியம் வழிந்தது. உணர்வுகளைக் கட்டுப்படுத்தும் ரியோவால் குழந்தையின் குறும்புகள் பற்றிச் சொன்னதும் உடனே பார்க்க ஆசைப்படுவதைத் தவிர்க்க முடியவில்லை.

மற்றவர்களையும் இப்படி அழைத்து அழ வைக்கும் திட்டமும் பிக்கியிடம் இருக்கிறது போல. அதனால், சட்டென்று நிறுத்தி விட்டார். இன்றைக்கு அது தொடரலாம்.