’ட்ரம்ப் பிரசாரம் கூட்டங்கள் மூலம் 700 பேர் கொரோனாவுக்கு பலியா?’ அதிர்ச்சி தகவல்

 

’ட்ரம்ப் பிரசாரம் கூட்டங்கள் மூலம் 700 பேர் கொரோனாவுக்கு பலியா?’ அதிர்ச்சி தகவல்

கடந்த ஏழெட்டு மாதங்களாக பரபரப்பாகப் பேசப்பட்டு வரும் அமெரிக்கத் தேர்தல் நடக்க நாளை ஒரு மட்டுமே இடைவெளி உள்ளது. ஆம். நாளை மறுநாள் அமெரிக்க அதிபர் தேர்தல்.

குடியரசுக் கட்சி சார்ப்பில் தற்போதைய அதிபர் டொனால்டு ட்ரம்ப் மீண்டும் அதிபர் போட்டியில் குதிக்கிறார். ஜனநாயக் கட்சியின் சார்பில் அமெரிக்க அதிபர் வேட்பாளராகப் போட்டியிடுகிறார் ஜோ பிடன். துணை அதிபராக ஜனநாயகக் கட்சியின் சார்பில் போட்டியிட இந்திய வம்சாவளி பெண் கமலா ஹாரீஸைத் தேர்வு செய்யப்படிருக்கிறார்.

’ட்ரம்ப் பிரசாரம் கூட்டங்கள் மூலம் 700 பேர் கொரோனாவுக்கு பலியா?’ அதிர்ச்சி தகவல்

அதிபர் ட்ரம்ப் பற்றி தொடக்கம் முதலே ஒரு குற்றச்சாட்டு அழுத்தமாக எதிர்கட்சிகளால் முன்வைப்படுவது, ‘கொரோனா தொற்று அமெரிக்காவில் பரவும்போது அதை அலட்சியமாகக் கையாண்டு விட்டார்’ என்பதே.

எதிர்கட்சிகள் சொல்வது உண்மையா.. பொய்யா என்பதை அங்கு இரண்டு லட்சம் பேருக்கு மேல் பலியான கொரோனா மரணங்களே உலகிற்குச் சொல்லின. அதையும் தாண்டி அதிபர் ட்ரம்ப்க்கே கொரோனா தொற்று உறுதியானது.

’ட்ரம்ப் பிரசாரம் கூட்டங்கள் மூலம் 700 பேர் கொரோனாவுக்கு பலியா?’ அதிர்ச்சி தகவல்

ஆயினும் சில நாட்கள் மட்டுமே சிசிக்கை எடுத்துக்கொண்டு பிரசாரத்தைத் தொடர்ந்தார் ட்ரம்ப். மக்கள் ஏராளமாகத் திரண்டனர். ஆனால், அதுவே வேறொரு சிக்கலாக உருவெடுத்து வந்துள்ளது.

அமெரிக்காவின் புகழ்பெற்ற ஸ்டான்போர்டு பல்கலைக்கழகம் அதிர்ச்சி தரும் ஆய்வு முடிவை வெளியிட்டுள்ளது. அப்பல்கலைக்கழகம், ஜூன் 20 முதல் தொடர்ந்து மூன்று மாதங்கள் அதாவது செப்டம்பர் 22 வரை தனது ஆய்வை நடத்தியுள்ளது. அதில் ட்ரம்ப் நடத்திய 18 கூட்டங்கள் ஆய்வு செய்யப்பட்டன.

ட்ரம்ப் பிரசாரக்கூட்டங்களில் சமூக இடைவெளி பின்பற்றாமை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் சுமார் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அமெரிக்கர்களுக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம் என்றும், அதன் வழியே 700 பேர் வரை இறந்திருக்கலாம் என்றும் கணித்துள்ளது.

இந்த ஆய்வு மேம்போக்காக செய்யப்பட்டது என்று நினைக்கக்கூடாது என தனது இணையத்தளத்தில் விரிவான கட்டுரையை வெளியிட்டுள்லது ஸ்டான்போர்டு பல்கலைக்கழகம்.

டொனால்ட் ட்ரம்பின் செயல்பாடுகளைக் கண்டித்து வரும் ஜோ ட்ரம்ப், இதற்கும் கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்திருக்கிறார். இந்த ஆய்வின் முடிவு தேர்தலில் எதிரொலிக்கும் என்று நினைக்கின்றனர் விமர்சகர்கள்.