ஒரே மாதத்தில் சுமார் 700 மாணவர்களுக்கு கொரோனா!

 

ஒரே மாதத்தில் சுமார் 700 மாணவர்களுக்கு கொரோனா!

கர்நாடக மாநிலத்தில் கடந்த ஒரு மாதத்தில் சுமார் 700 மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பாதிப்புக்கு உள்ளான மாணவர்களில் அதிகப்படியானோர் கேரளாவை சேர்ந்த மாணவர்கள் என்பதால் ரயில் நிலையம், பேருந்து நிலையங்களில் பரிசோதனையை கர்நாடக அரசு தீவிரப்படுத்தியுள்ளது.

ஒரே மாதத்தில் சுமார் 700 மாணவர்களுக்கு கொரோனா!

கர்நாடக மாநிலத்தில் கடந்த ஜூலை மாதத்தில் இருந்து அனைத்து கல்லூரிகளும் திறக்கப்பட்டு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதனிடையே கர்நாடக மாநிலத்தில் கடந்த ஒரு மாதத்தில் சுமார் 700 கல்லூரி மாணவர்களுக்கு வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

தக்சின கன்னடா, கோலார் பெங்களூரு உள்ளிட்ட மாவட்டங்களில் செவிலியர் கல்லூரிகளில் குறிப்பாக கேரளாவில் இருந்து கர்நாடகவிற்கு படிக்க வந்த மாணவர்கள் அதிகப்படியாக வைரஸ் பாதிப்பிற்கு உள்ளாகி உள்ளனர். கோளார் மாவட்டத்தில் ஒரே கல்லூரியில் 80 மாணவர்களுக்கும், பெங்களூருவில் ஒரே கல்லூரியில் 34 மாணவர்களுக்கும், கேரள எல்லைப் பகுதியில் உள்ள தக்சின கன்னடா மாவட்டத்தில் சுமார் 6 கல்லூரியில் 500 மாணவர்களுக்கு தொற்று ஏற்பட்டிருப்பதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

ஒரே மாதத்தில் சுமார் 700 மாணவர்களுக்கு கொரோனா!

பாதிப்பு கண்டறியப்பட்ட அனைத்து கல்லூரிகளும், தற்காலிகமாக மூடப்பட்டு கல்லூரி மாணவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தபட்டுள்ளனர். இதனிடையே வேறு மாநிலத்தில் இருந்து கர்நாடக மாநிலத்திற்குள் வரும் அனைவருக்கும் தீவிர கொரோனா பரிசோதனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல் அனைத்து ரயில் நிலையங்கள் மற்றும் பேருந்து நிலையங்களில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் சுதாகர் தெரிவித்துள்ளார். வேறு மாநிலத்தில் இருந்து கர்நாடகாவிற்கு வரும்போது இரு முறை தடுப்பூசி செலுத்திக்கொண்டு சான்றிதழ் இருந்தாலும் அண்மையில் வைரஸ் பரிசோதனை மேற்கொண்ட சான்றிதழ் இருந்தாலும் அனைவருக்கும் கட்டாய வைரஸ் பரிசோதனை என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

அண்மைக்கலமாக அதிகப்படியான போலி சான்றிதழ்கள் கண்டறியப்பட்டு வருவதால் கட்டாய பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கேரளாவில் இருந்து வரும் மாணவர்கள் மூலமாக வைரஸ் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், கேரளா கர்நாடக எல்லைப் பகுதியில் வைரஸ் பரவலை தடுக்க எல்லையில் உள்ள அனைத்து கிராமங்களிலும் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு அதிக எண்ணிக்கையில் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருவதாக கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார்.