700 கோடி.. 10.5% உள் ஒதுக்கீடு.. பாமக பேச்சுவார்த்தையில் முடிவானது இதுதானா?

 

700 கோடி.. 10.5% உள் ஒதுக்கீடு.. பாமக பேச்சுவார்த்தையில் முடிவானது இதுதானா?

தைலாபுரத்தில் அதிமுக அமைச்சர்கள் கடந்த ஜனவரி மாதம் 11ம் தேதி அன்று ராமதாசுடன் பேச்சுவார்த்தை நடத்தி சென்ற பின்னர், ’’தமிழக அமைச்சர்கள் பி.தங்கமணி, எஸ்.பி. வேலுமணி ஆகியோர் இன்று என்னை தைலாபுரம் இல்லத்தில் சந்தித்துப் பேசினார்கள். வன்னியர்கள் இட ஒதுக்கீடு குறித்து பேசப்பட்டது. பொங்கல் திருநாளுக்குப் பிறகு மீண்டும் இதுகுறித்து பேசுவதாக உறுதியளித்துச் சென்றுள்ளனர். அமைச்சர்களுடன் வன்னியர் இடப்பங்கீடு குறித்து மட்டும் தான் பேசப்பட்டது. அரசியலோ, தேர்தல் குறித்தோ பேசப்படவில்லை. வன்னியர் இடப்பங்கீடு கோரிக்கை நிறைவேற்றப்படும் வரை கூட்டணி குறித்த பேச்சுக்கே இடமில்லை என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்!’’என்று பதிவிட்டிருந்தார் ராமதாஸ்.

700 கோடி.. 10.5% உள் ஒதுக்கீடு.. பாமக பேச்சுவார்த்தையில் முடிவானது இதுதானா?

இதன்பின்னர் மீண்டும் அமைச்சர்கள் தைலாபுரம் சென்று பேச்சுவார்த்தை நடத்தினர்.

இந்நிலையில் இன்று சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள அமைச்சர் தங்கமணியின் இல்லத்தில் பேச்சுவார்த்தை நடந்தது. கூட்டத்தில் தங்கமணி, வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட அமைச்சர்கள் கலந்துகொண்டனர். அதேபோல் பேச்சுவார்த்தையில் பாமக தலைவர் ஜி.கே. மணி, ஏகே மூர்த்தி, வழக்கறிஞர் பாலு உட்பட 6 பேர் பங்கேற்றனர்.

700 கோடி.. 10.5% உள் ஒதுக்கீடு.. பாமக பேச்சுவார்த்தையில் முடிவானது இதுதானா?

இந்த பேச்சுவார்த்தையில் என்ன நடந்தோ தெரியவில்லை. ’’சட்டத்திற்காக மக்களா …. மக்களுக்காகச் சட்டமா? மக்களுக்காகத் தான் சட்டங்களே தவிர, சட்டங்களுக்காக மக்கள் அல்ல… அதனால் தான் மக்களின் தேவைகளுக்கு ஏற்ப இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் இதுவரை 104 திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன!’’ என்று டுவிட்டர் பதிவில் தனது ஆத்திரத்தினை வெளிப்படுத்தி இருக்கிறார்.

ராமதாசின் இந்த பதிவின் மூலம், இட ஒதுக்கீட்டில் உடன்பாடு ஏற்படவில்லை என்றே தெரிகிறது.

அதே நேரம், அமைச்சர்களுடனான பேச்சுவார்த்தையில் 10.5 சதவிகித உள் ஒதுக்கீடு மற்றும் 700 கோடி பேரம் பேசப்பட்டிருக்கிறது என்கிற தகவல் சமூக வலைத்தளங்களில் உலவுகிறது.