700 கொம்பு சீவிய காளைகள்…730 மீசை முறுக்கும் வீரர்கள்: அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு!

 

700 கொம்பு சீவிய காளைகள்…730 மீசை முறுக்கும் வீரர்கள்: அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு!

108 ஆம்புலன்ஸ்கள் மற்றும் கால்நடைகளுக்கான 2 ஆம்புலன்சுகள்  முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.

பொங்கல் பண்டிகையையொட்டி தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்தப்படுவது வழக்கமாகும். குறிப்பாக மதுரை மாவட்டம் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூரில் நடைபெறும் ஜல்லிக்கட்டுகள் உலக புகழ் பெற்றவை.

அந்த வகையில், அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி  இன்று காலை 8 மணிக்கு உறுதிமொழி எடுக்கப்பட்டு துவங்கவுள்ள  இந்த  ஜல்லிக்கட்டு போட்டி மாலை  4 மணிவரையிலும் நடைபெறவுள்ளது. ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் 700 காளைகளை பிடிக்க, 730 மாடுபிடி வீரர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. உடல் தகுதி பரிசோதனைக்கு  பிறகு அவர்கள் மாடுபிடிக்க அனுமதிக்கப்படுவர். 

ttn

ஜல்லிக்கட்டையொட்டி 1500 காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். பார்வையாளர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, வாடிவாசலில் இருந்து 8 அடி உயரத்தில் இரட்டை அடுக்கு தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டுள்ளது. 10 மருத்துவர்களை கொண்ட 5 மருத்துவக்குழுக்கள் தயார் நிலையில் உள்ளது. மாடுபிடி வீரர்களுக்கு காயம் ஏற்படும் என்பதால் 10-க்கும் அதிகமான ஆம்புலன்ஸ்கள், இரண்டு இருசக்கர 108 ஆம்புலன்ஸ்கள் மற்றும் கால்நடைகளுக்கான 2 ஆம்புலன்சுகள்  முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.

ttn

பல சர்ச்சைகளுக்குப் பிறகு இந்த ஜல்லிகட்டுப்போட்டி நடப்பதால் இதற்கு ஓய்வுபெற்ற மாவட்ட நீதிபதி மாணிக்கம் தலைமையில் நடைபெற உள்ளது. மேலும் மாவட்ட ஆட்சியர் வினய், மாநகர காவல் ஆணையர் டேவிட்சர் தேவ ஆசிர்வாதம், மதுரை மாநகராட்சி ஆணையர் விசாகன் ஆகியோரை கொண்ட ஜல்லிக்கட்டு கமிட்டி அமைக்கப்பட்டு போட்டி கண்காணிக்கப்படவுள்ளது. மேலும் போட்டியை கண்காணிக்க  50-க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. 

ஒருமணி நேரத்திற்கு ஒருமுறை சுழற்சி அடிப்படையில் ஜல்லிக்கட்டு நடக்கும். ஒவ்வொரு சுற்றிலும் 75 வீரர்கள் களமிறக்கப்படுவார்கள். அதிக மாடுகளை பிடித்த வீரர்கள் அடுத்த சுற்றுக்கு அனுப்பப்படுவார்கள்.