700 கி.மீ தூரத்தில் உள்ள வீட்டுக்கு குழந்தைகளோடு சைக்கிளில் செல்ல முயன்ற தம்பதி விபத்தில் பரிதாபமாக பலி

 

700 கி.மீ தூரத்தில் உள்ள வீட்டுக்கு குழந்தைகளோடு சைக்கிளில் செல்ல முயன்ற தம்பதி விபத்தில் பரிதாபமாக பலி

சத்தீஸ்கரில் இருந்து ஒரு புலம்பெயர்ந்த தொழிலாளி மற்றும் அவரது மனைவி, கொரோனா வைரஸ் ஊரடங்குக்கு மத்தியில் உத்தரபிரதேசத்தின் லக்னோவில் சிக்கினர்.

சத்தீஸ்கரில் இருந்து ஒரு புலம்பெயர்ந்த தொழிலாளி மற்றும் அவரது மனைவி, கொரோனா வைரஸ் ஊரடங்குக்கு மத்தியில் உத்தரபிரதேசத்தின் லக்னோவில் சிக்கினர். இவர்கள் புலம்பெயர்ந்த தொழிலாளிகள் ஆவார்கள். இந்நிலையில், 750 கிலோமீட்டர் தொலைவில் உள்ள தங்கள் சொந்த ஊரான பெமித்ரா மாவட்டத்திற்கு சைக்கிளிலேயே குழந்தைகளுடன் செல்ல அவர்கள் முடிவெடுத்து கிளம்பினர்.

அவர்கள் சைக்கிளை புறப்பட்ட சில நிமிடங்களில் அந்த தம்பதியினர் சாலை விபத்தில் பரிதாபமாக உயிரிழந்தனர். அவர்களது இரண்டு குழந்தைகள் ஐந்து வயதிற்கு குறைவானவர்கள் அவர்களுடன் இருந்தனர். லக்னோ காவல்துறையினரின் கூற்றுப்படி, அதிகாலை 1.30 மணியளவில் நகரின் ஷாஹீத் பாதையில் 23 கி.மீ. வெளிப்புற பைபாஸ் சாலையில் இந்த விபத்து நடந்தது.

accident

கிருஷ்ணா சாஹு (45), அவரது மனைவி பிரமிலா (40) மற்றும் அவர்களது குழந்தைகள் அதிவேக வாகனத்தில் மோதியதாக போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து உயிருக்கு ஆபத்தான நிலையில் தம்பதியினர் உள்ளூர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். ஆனால் இருவரையும் காப்பாற்ற முடியவில்லை. இந்த விபத்தில் அந்த தம்பதியின் குழந்தைகள் அதிர்ஷ்டவசமாக காயத்துடன் தப்பினர். அவர்களின் குழந்தைகள் கிருஷ்ணாவின் சகோதரரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

கிருஷ்ணர் லக்னோவில் தொழிலாளியாக பணிபுரிந்தார். வீடு திரும்ப முடிவு செய்வதற்கு முன்பு அவர் அந்த நகரத்தில் எவ்வளவு காலம் இருந்தார் என்பது தெளிவாகத் தெரியவில்லை. அவரது குடும்பமும் அவரும் கடும் வறுமையில் வாழ்ந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.