தவறுதலாக ‘ஒரே நாளில் 2 முறை’ தடுப்பூசி; 70வயது மூதாட்டியின் நிலை என்ன?

 

தவறுதலாக ‘ஒரே நாளில் 2 முறை’ தடுப்பூசி; 70வயது மூதாட்டியின் நிலை என்ன?

வேதாரண்யம் அருகே தவறுதான் ஒரே நாளில் இரண்டு முறை தடுப்பூசி செலுத்திக் கொண்ட மூதாட்டியின் உடல்நிலையை மருத்துவர்கள் கண்காணித்து வருகிறார்கள்.

கொரோனா வைரஸ்க்கு எதிரான தடுப்பூசி நாடு முழுவதும் செலுத்தப்பட்டு வரும் நிலையில் 2 டோஸ் செலுத்திக் கொண்டால் தான் நோயை எதிர்த்துப் போராட முடியும் என மருத்துவ வல்லுநர்கள் தெரிவித்தனர். அதன் படி மக்கள் அனைவருக்கும் இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. முதல் டோஸுக்கும் இரண்டாவது டோஸுக்கும் இடையே சுமார் இரண்டு மாதங்கள் இடைவெளி விட்டு செலுத்தப்படுகின்றன.

தவறுதலாக ‘ஒரே நாளில் 2 முறை’ தடுப்பூசி; 70வயது மூதாட்டியின் நிலை என்ன?

இந்த நிலையில், வேதாரண்யம் அருகே 70 வயது மூதாட்டி ஒருவருக்கு ஒரே நாளில் இரண்டு முறை தடுப்பூசி செலுத்தப்பட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது. சரபோஜிபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் கடந்த 16ம் தேதி அலமேலு என்ற 70 வயது மூதாட்டி முதல் டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளார். மூதாட்டி மரத்தடியில் அமர்ந்து கொண்டிருந்த போது அவருக்கு தடுப்பூசி செலுத்தவில்லை எனக் கூறி சுகாதார ஊழியர்கள் மீண்டும் அவருக்கு தடுப்பூசி செலுத்தியுள்ளனர். பிறகு தான் அவருக்கு ஏற்கனவே தடுப்பூசி செலுத்தப்பட்டது தெரிய வந்துள்ளது.

ஒரு டோஸ் போட்டாலே காய்ச்சல் உள்ளிட்ட பல பாதிப்பு ஏற்படும் நிலையில் இந்த மூதாட்டி ஒரே நாளில் இரண்டு முறை தடுப்பூசி செலுத்திக் கொண்டதால் அவர் உடனடியாக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் குணம் அடைந்து விட்டதாகவும் மூன்றாவது நாளாக அவரை தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.