Home இந்தியா உயிர் போகும் நிலையில் உருவான காதல் -தாத்தாவின் காதலை சேர்த்து வைத்த பேரன்கள்

உயிர் போகும் நிலையில் உருவான காதல் -தாத்தாவின் காதலை சேர்த்து வைத்த பேரன்கள்

70 வயது தாத்தாவுக்கு அவரின் பிள்ளைகள்,பேரன்கள் அனைவரும் சேர்ந்து,அவரின் 55 வயது காதலியோடு திருமணம் செய்து வைத்த சம்பவம் அனைவரின் மனதை நெகிழ செய்துள்ளது.


மத்தியபிரதேச மாநிலம் அசோக் நகர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் உம்ராசிங் என்ற 70 வயது நபருக்கு 4 பிள்ளைகள் ,12 பேரக்குழந்தைகள் .ஆனால் அவரின் மனைவி உயிரோடு இல்லாததால் ,பிள்ளைகள் அனைவருக்கும் கல்யாணம் ஆகி விட்டதாலும் ,அவர் தனிமையில் வாடியதால் அவரின் உடல் நலம் பாதிக்கப்பட்டது .இதனால் அவரை அங்குள்ள ஒரு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர் .
அப்போது அந்த மருத்துவமனைக்கு இவரைப்போலவே கணவனை இழந்து பிள்ளைகள் கை விட்டதால் தனிமையில் வாடிய 55 வயது பெண் குட்புடி என்பவர் சிகிச்சைக்கு வந்தார் .
அப்போது இருவரும் அந்த மருத்துவமனையில் தங்களின் சோகக்கதைகளை பகிர்ந்து கொண்டனர் .அப்போது இருவரும் ஏறத்தாழ ஒரே நிலையில் இருந்ததால் இருவருக்கும் இந்த வயதான காலத்தில் காதல் உண்டானது .இதனால் இருவரும் அங்கு மனம் விட்டு பேசி, திருமணம் செய்து கொண்டு ஒருவருக்கொருவர் ஆறுதலாக இருக்க முடிவு செய்தனர் .
பிறகு இருவரும் மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் ஆகியதும் நேராக உம்ரான் சிங் தன்னுடைய காதலியை தன்னுடைய பிள்ளைகளுக்கு அறிமுகம் செய்து வைத்ததும், பிள்ளைகள் , பேரன்கள் அனைவரும் சேர்ந்து அவர்களுக்கு கோலாகலமாக அந்த ஊரே மெச்சுமளவுக்கு திருமணம் செய்து வைத்தனர் .

மாவட்ட செய்திகள்

Most Popular

தோஷங்களை போக்கும் பிரதோஷத்தில் சோமசூக்த பிரதட்சணம்!

உலகை காக்கும் பொருட்டு நன்மையை நமக்குத் தந்து, தீமையான விஷத்தை தான் ஏற்றுக் கொண்டார் சிவப்பெருமான். இவ்வாறு உலகை காத்த உத்தமனான பரமனை மனமுருக வேண்டி வழிபடும் தினமே பிரதோஷம்....

புத்தகத்தில் உள்ளதை திருமா மேற்கோள் காட்டினார்; அவரே சொன்னதுபோல் பாஜக அரசியல் செய்கிறது- கார்த்தி சிதம்பரம்

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் பொதுமக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம், “குஷ்பு முன்னாள் நடிகை என்பதனால் அவரது கைதை...

மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு! சமூக வலைதளத்தில் உலாவரும் ரஜினியின் கடிதம்…

கடந்த 2017ஆம் ஆண்டு டிசம்பர் மாத இறுதியில் ரசிகர்களுடனான சந்திப்பின்போது தான் அரசியலுக்கு வருவது உறுதி என்றும் போர் வரும் போது களம் காணுவோம் எனவும் அறிவித்தார். இதனைத் தொடர்ந்து,...

கோவையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட உதயநிதி ஸ்டாலின் மீது 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு!

திமுக தலைவர் ஸ்டாலினை விமர்சித்து ஒட்டிய போஸ்டர்களை கிழித்த திமுகவினர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டதை கண்டித்து, கோவையில் அக்கட்சியின் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த...
Do NOT follow this link or you will be banned from the site!