70 லட்சம் கொரோனா பாதிப்பைக் கடந்த நாடு இதுதான்!

 

70 லட்சம் கொரோனா பாதிப்பைக் கடந்த நாடு இதுதான்!

கொரோனா உலகையே மிரட்டி வருகிறது. பெரிய வல்லரசு நாடுகளே கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த முடியாமல் தவித்து வருகிறது.

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டிப்போர். 7 கோடியே 45 லட்சத்து 34 ஆயிரத்து 581 பேர். கொரோனா நோய்த் தொற்றிலிருந்து குணம் அடைந்து வீடு திரும்பியோர் 5 கோடியே 23 லட்சத்து 73 ஆயிரத்து 081 நபர்கள்.

70 லட்சம் கொரோனா பாதிப்பைக் கடந்த நாடு இதுதான்!

கொரோனா நோய்த் தொற்றால் சிகிச்சை பலன் அளிக்காது இறந்தவர்கள் 16 லட்சத்து 55 ஆயிரத்து 230 பேர். தற்போது சிகிச்சை எடுத்துக்கொண்டிப்போர் 2,05,06,270 பேர்.

பிரேசில் நாட்டில் கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியது முதலே அங்கு பாதிப்பு அதிகம். இடையில் ஒரு மாதம் புதிய நோயாளிகளின் எண்ணிக்கை சற்று குறைந்திருந்தது. மீண்டும் அதிகரிக்கத் தொடங்கி விட்டது.

70 லட்சம் கொரோனா பாதிப்பைக் கடந்த நாடு இதுதான்!

பிரேசிலில் கொரோனாவின் மொத்த பாதிப்பு 70 லட்சத்தைக் கடந்துவிட்டது. இப்போதைய நிலவரப்படி பிரேசிலில் மொத்த பாதிப்பு 70,42,695. அவர்களில் 61.32.683 பேர் சிகிச்சையில் குணமடைந்துவிட்டனர். சிகிச்சை பலன் அளிக்காது 1,83,822 பேர் மரணம் அடைந்துவிட்டனர்.

தற்போது 7,26,190 பேர் சிகிச்சையில் இருக்கிறார்கள். இவர்களில் 1 சதவிகிதத்தினர் தீவிர சிகிச்சையில் உள்ளனர். இறப்பு சதவிகிதம் தற்போது 3 சதவிகிதமாக இருக்கிறது.

70 லட்சம் கொரோனா பாதிப்பைக் கடந்த நாடு இதுதான்!

நேற்று மட்டுமே 68,437 பேர் புதிய நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. நேற்று 968 பேர் கொரோனாவால் இறந்திருக்கிறார்கள். ஒரே நாளில் அதிக மரணம் நடந்த நாள் ஜூலை 29. இறந்தவர்கள் எண்ணிக்கை 1554 பேர்.