70 வயது மணமகன் செய்த புகார் – கம்பி எண்ணும் 49 வயது மணமகள்

 

70 வயது மணமகன் செய்த புகார் – கம்பி எண்ணும் 49 வயது மணமகள்

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்ன சேலம் செங்குந்தர் பகுதியில் வசித்து வருபவர் கோவிந்தசாமி. 70 வயதான கோவிந்தசாமியின் மனைவி வசந்தா கடந்த ஆண்டு கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துவிட்டார்.

70 வயது மணமகன் செய்த புகார் – கம்பி எண்ணும் 49 வயது மணமகள்

கோவிந்த சாமிக்கு இரண்டு மகள்கள், ஒருமகன் உள்ளனர். ஆனால், வயதான காலத்தில் தன்னை பார்த்துக்கொள்ள யாரும் இல்லாததால், தனக்கு துணை தேட திருமண தகவல் மையம் சென்றிருக்கிறார்.

பேரனுக்கா?பேத்திக்கா? யாருக்கு வரன் பார்க்கணும். என்று திருமணம் தகவல் மையத்தினர் கேட்க, தனக்குத்தான் பெண் பார்க்கணும் என்று முதியவர் சொல்ல அதிர்ந்து போனார்கள். ஆனாலும், தங்கள் வேலையை செய்வோம் என்று கோவிந்தசாமியின் புகைப்படம் மற்றும் விபரங்களுடன் விளம்பரம் செய்தனர்.

சில நாட்கள் கழித்து, சீர்காழியை சேர்ந்த 49 வயது விஜயசாந்தி என்பவர் தங்களை திருமணம் செய்துகொள்ள விரும்புகிறார் என்று சொல்லவும், கோவிந்தசாமி விஜயசாந்தியிடம் செல்போனில் பேசியிருக்கிறார்.

70 வயது மணமகன் செய்த புகார் – கம்பி எண்ணும் 49 வயது மணமகள்

பின்னர் விஜயசாந்தியே கோவிந்தசாமியின் வீட்டுக்கு 23.4.2021 அன்று மாப்பிள்ளை பார்க்க வந்துள்ளார். மாப்பிள்ளை பார்த்துவிட்டு உடனே புறப்படாமல், இரண்டு நாட்கள் அங்கேயே தங்கியிருந்து விட்டு சென்றிருக்கிறார். பின்னர் மீண்டும் 7.5.2021 அன்று கோவிந்தசாமி வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது கோவிந்தசாமி அசந்த நேரம் பார்த்து , மனைவி வசந்தாவின் 9 பவுன் தாலி சரடினை அவரது புகைப்படத்திலேயே மாட்டி வைத்து இருந்தை எடுத்து வைத்துக்கொண்டு எஸ்கேப் ஆகிவிட்டார்.

விஜயசாந்தியின் செல்போனுக்கு தொடர்பு கொண்டால் அது சுவிட்ச் ஆப் என்று வந்துள்ளது. அவரது ஊரையும் பொய் சொல்லி ஏமாற்றியிருக்கிறார். இதனால் ஏமாந்து போய்விட்டதை மகள்களிடம் சொல்லி புலம்பியிருக்கிறார் கோவிந்தசாமி.

இந்த நிலையில் கடந்த 12ம் தேதி அன்று சின்னசேலம் பேருந்து நிலையத்தில் கோவிந்தசாமி தன் மகள்களுடன் நின்றிருந்தபோது எதார்த்தமாக அங்கே வந்த விஜயசாந்தி சிக்கினார். அருகே இருந்த போலீசில் அவரை ஒப்படைத்தனர். விசாரணைக்கு பின்னர் விஜயசாந்தியை சிறையில் அடைத்துள்ளனர்.