லாக்டவுனுக்கு எதிராக 70 சதவீத மகாராஷ்டிரா மக்கள்… ராஜ் தாக்கரே கட்சி தகவல்..

 

லாக்டவுனுக்கு எதிராக 70 சதவீத மகாராஷ்டிரா மக்கள்… ராஜ் தாக்கரே கட்சி தகவல்..

மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரேவின் நெருங்கிய உறவினர் ராஜ் தாக்கரே மகாராஷ்டிரா நவநிர்மான் சேனா (எம்.என்.எஸ்.) என்ற கட்சியை நடத்தி வருகிறார். மகாராஷ்டிராவில் நடைமுறையில் உள்ள லாக்டவுன் குறித்து மக்களின் உண்மையான மனநிலை என்பதை தெரிந்து கொள்ளும் நோக்கில் எம்.என்.எஸ். கட்சி ஆன்லைனில் ஒரு சர்வே நடத்தியது.

லாக்டவுனுக்கு எதிராக 70 சதவீத மகாராஷ்டிரா மக்கள்… ராஜ் தாக்கரே கட்சி தகவல்..
ராஜ் தாக்கரே

அந்த ஆன்லைனில் லாக்டவுன் தொடர்பாக மொத்தம் 9 கேள்விகள் கேட்கப்பட்டு இருந்தது. மொத்தம் 6 நாட்கள் நடைபெற்ற சர்வேயில் இந்த சர்வேயில் மொத்தம் 54,177 பேர் பங்கேற்றனர். சர்வேயில் பங்கேற்றவர்களில் 70.03 சதவீதம் பேர் லாக்டவுனுக்கு எதிராக வாக்களித்ததாக எம்.என்.எஸ். கட்சி தெரிவித்துள்ளது. இந்த சர்வே தொடர்பாக எம்.என்.எஸ். கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான சந்தீப் தேஷ்பாண்டே டிவிட்டரில், சர்வே முடிவுகளை மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே மற்றும் துணை முதல்வர் அஜித் பவார் ஆகியோருடன் பகிர்ந்து கொள்வோம்.

லாக்டவுனுக்கு எதிராக 70 சதவீத மகாராஷ்டிரா மக்கள்… ராஜ் தாக்கரே கட்சி தகவல்..
சந்தீப் தேஷ் பாண்டே

லாக்டவுன் குறித்து மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதையும் மாநிலம் அறிந்து கொள்ள வேண்டும். லாக்டவுனுக்கு எதிராக 70.03 சதவீத மக்கள் வாக்களித்து இருப்பது எச்சரிக்கை மணி. அரசு இந்த லாக்டவுனை முடிவுக்கு கொண்டு வர வேண்டும், ஒவ்வொன்றையும் மீண்டும் தொடங்க வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம் என பதிவு செய்து இருந்தார். அதேசமயம் மகாராஷ்டிரா அரசோ லாக்டவுனை தளர்த்தினால் பொதுமக்கள் அதிகளவில் கூடி கோவிட்-19 பரவலின் இரண்டாவது அலை ஏற்படுமோ என்று பயப்படுகிறது. அதனால்தான் ஒவ்வொன்றையும் மெதுவாக திறக்கிறது.