70 வயது பாட்டியாக நடிக்கும் சமந்தா?

 

70 வயது பாட்டியாக நடிக்கும் சமந்தா?

கோலிவுட்டின் முன்னணி நாயகியான சமந்தா 70-வயது மூதாட்டியாக நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை: கோலிவுட்டின் முன்னணி நாயகியான சமந்தா 70-வயது மூதாட்டியாக நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நடிகை சமந்தா நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘யூ-டர்ன்’ திரைப்படம் நல்ல விமர்சனங்களை பெற்றது. இதைத் தொடர்ந்து ‘ஆரண்ய காண்டம்’ இயக்குநர் தியாகராஜா குமாரராஜா இயக்கத்தில் ‘சூப்பர் டீலக்ஸ்’ படத்தில் நடித்து வருகிறார். அதுதவிர நாக சைடன்யாவுடன் இணைந்து ஒரு தெலுங்கு படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில், சமந்தா நடிக்கவிருக்கும் அடுத்த திரைப்படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. ‘மிஸ் கிரான்னி’ எனும் கொரியன் பட ரீமேக்கில் சமந்தா நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. ஃபோட்டோ ஸ்டூடியோ ஒன்றில் ஃபோட்டொ எடுத்ததும் 70 வயது பாட்டியாக இருந்து பின் 20 வயது குமரியாக மாறிவிடுவார் என்பது தான் மிஸ் கிரான்னி படத்தின் கதை.

இந்த படத்தில் 20 வயது குமரியாக சமந்தா நடிக்கவுள்ளதாகவும், 70 வயது கதாபாத்திரத்தில் பழம்பெரும் நடிகை ஒருவர் நடிக்கவிருப்பதாகவும் கூறப்படுகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது.