70 வயதுக்கு மேல் நடித்து முடித்தவர்கள் ஆட்சிக்கு வர நினைக்கும் பொது வி.சி.க ஆட்சிக்கு வரக்கூடாதா : திருமாவளவன் கேள்வி!

 

70 வயதுக்கு மேல் நடித்து முடித்தவர்கள் ஆட்சிக்கு வர நினைக்கும் பொது வி.சி.க ஆட்சிக்கு வரக்கூடாதா : திருமாவளவன் கேள்வி!

குடியுரிமை சட்டத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கும் கட்சிகளில் ஒன்றாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சி இருந்து வருகிறது.

குடியுரிமை சட்டத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கும் கட்சிகளில் ஒன்றாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சி இருந்து வருகிறது. சமீபத்தில் திமுக சார்பில் நடத்தப்பட்ட சி.ஏ.ஏ எதிர்ப்பு பேரணியில் முக்கிய பங்காற்றியதுடன் திமுகவின் கையெழுத்து இயக்கத்திலும் இணைந்து பணியாற்றியது. இக்கட்சி சார்பில் நேற்று தேசம் காப்போம் என்ற பேரணி திருச்சியில் நடைபெற்றது. அதில் சிஏஏவை திரும்பப் பெற வலியுறுத்தும் இட ஒதுக்கீடு உரிமையைப் பாதுகாக்க வேண்டும் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 

ttn

அப்போது பேசிய வி.சி.க தலைவர் தொல்.திருமாவளவன், பட்டியல் இன மக்கள் நீதிபதிகள் ஆவது யாரும் அளித்த பிச்சை கிடையாது. அது அரசியல் அமைப்பு சட்டம் கொடுத்த உரிமை. பட்டியலின மக்களுக்கு வழங்க மறுக்கப்பட்ட உரிமையை  அரசியல் அமைப்பு சட்டம் கொடுத்திருக்கிறது என்று கூறினார். அதனைத்தொடர்ந்து, வரப்போகும் சட்டமன்ற  தேர்தலில் யார் ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்ற முடிவை விசிக தான் தீர்மானிக்கும் என்று கூறினார். மேலும், 70 வயதுக்கு மேல் நடித்து முடித்தவர்கள் எல்லாம் ஆட்சிக்கு வர நினைக்கும் போது 30 வருடமாக மக்களுக்கு சேவை செய்யும் வி.சி.க வரக்கூடாதா என்றும் கேள்வி எழுப்பினார்.