70 வயதிலும் சுறுசுறுப்பாக இருக்க ரஜினி சொன்ன ஆலோசனை! – வச்சி செய்யும் ரசிகர்கள்

தெலுங்கில் வெளியாகும் தர்பார் படத்தின் பிரமோஷன் ஐதராபாத்தில் நடந்தது. இதில், நடிகர் ரஜினிகாந்த், தயாரிப்பாளர் சுபாஷ்கரன், தெலுங்கில் வெளியிடும் பிரசாத், இயக்குநர் முருகதாஸ் உள்பட பலர் கலந்துகொண்டனர். இந்த நிகழ்ச்சியில் ரஜினி பேசும்போது, “தமிழ் ரசிகர்களைப் போலவே தெலுங்கு ரசிகர்களும் என் மீது அன்பு செலுத்துவது பூர்வ ஜென்ம புண்ணியம். நான் நடித்த படங்கள் தெலுங்கிலும் நன்றாக ஓடின. இதற்கு நான் மட்டுமே காரணம் இல்லை. படம் பண்ணும்போதே சில மேஜிக்குகள் செய்ய வேண்டும். முருகதாஸ் இயக்கத்தில் நடிக்க வேண்டும் என்று பல ஆண்டுகள் நினைத்தேன். இப்போது அது நிறைவேறியுள்ளது. 

70 வயதில் சுறுசுறுப்பாக இருக்க ரஜினி கூறிய காரணங்கள் தற்போது சமூக ஊடகங்களில் மிகக் கடுமையாக விமர்சனங்களுக்கு ஆளாகி உள்ளது.
தெலுங்கில் வெளியாகும் தர்பார் படத்தின் பிரமோஷன் ஐதராபாத்தில் நடந்தது. இதில், நடிகர் ரஜினிகாந்த், தயாரிப்பாளர் சுபாஷ்கரன், தெலுங்கில் வெளியிடும் பிரசாத், இயக்குநர் முருகதாஸ் உள்பட பலர் கலந்துகொண்டனர். இந்த நிகழ்ச்சியில் ரஜினி பேசும்போது, “தமிழ் ரசிகர்களைப் போலவே தெலுங்கு ரசிகர்களும் என் மீது அன்பு செலுத்துவது பூர்வ ஜென்ம புண்ணியம். நான் நடித்த படங்கள் தெலுங்கிலும் நன்றாக ஓடின. இதற்கு நான் மட்டுமே காரணம் இல்லை. படம் பண்ணும்போதே சில மேஜிக்குகள் செய்ய வேண்டும். முருகதாஸ் இயக்கத்தில் நடிக்க வேண்டும் என்று பல ஆண்டுகள் நினைத்தேன். இப்போது அது நிறைவேறியுள்ளது. 
70 வயதிலும் எப்படி சுறுசுறுப்பாக இருக்கின்றீர்கள், ஹீரோவாக நடிக்கின்றீர்கள் என்று கேட்கிறார்கள். இவ்வளவு எனர்ஜியாக இருக்க சில ஆலோசனை சொல்கிறேன். ஆசையைக் குறைத்து கொஞ்சமாக ஆசைப்படுங்கள். கொஞ்சமாக சாப்பிடுங்கள். கொஞ்சமாக உடற்பயிற்சி செய்யுங்கள். கொஞ்சமாக தூங்குங்கள். கொஞ்சமாகப் பேசுங்கள். இதை கடைப்பிடித்தாலே தானாக எனர்ஜி கிடைக்கும்” என்றார்.
ரஜினியின் இந்த ஆலோசனையை சமூக ஊடகங்களில் பலரும் விமர்சித்து வருகின்றனர். ஒருவர், சம்பளம் மட்டும் கோடிக்கோடியாய் வாங்குங்கள்… உங்கள் படத்தின் டிக்கெட்டை அதிக விலைக்கு ரசிகர்களிடம் விற்பனை செய்யுங்கள்… இதேபோல் சொல்ல நிறைய இருக்கு தலைவரே!” என்று கூறியுள்ளார். இப்படி பலரும் ரஜினியின் கருத்தை விமர்சித்து வருகின்றனர்.