Home தமிழகம் 70 வருடங்களுக்குப் பிறகு எடப்பாடி பழனிச்சாமி ஆட்சி வரலாற்றில் இடம்பெறுவது இதனால்தான்

70 வருடங்களுக்குப் பிறகு எடப்பாடி பழனிச்சாமி ஆட்சி வரலாற்றில் இடம்பெறுவது இதனால்தான்

சென்னைக்கு குடிநீர் வழங்கக்கூடிய நான்கு முக்கிய ஏரிகளில் இன்றைய நிலவரப்படி, அவற்றின் மொத்த கொள்ளள‌வில் வெறும் 1.3% நீர்தான் உள்ளது. கடந்த 74 வருட மோசமான வறட்சி கணக்கீட்டில், இது ஐந்தாவது இடத்தில் இருக்கிறது. செம்பரம்பாக்கம், செங்குன்றம், பூண்டி, மற்றும் சோழவரம் ஏரிகளின் தற்போதையை நிலை கேட்டால், சென்னைவாசிகளுக்கு யாரும் பெண் குடுக்கவே தயங்குவார்கள். செம்பரம்பாக்கம் ஏரியில் தண்ணீர் இல்லாததால், மீன்கள் செத்து

சென்னைக்கு குடிநீர் வழங்கக்கூடிய நான்கு முக்கிய ஏரிகளில் இன்றைய நிலவரப்படி, அவற்றின் மொத்த கொள்ளள‌வில் வெறும் 1.3% நீர்தான் உள்ளது. கடந்த 74 வருட மோசமான வறட்சி கணக்கீட்டில், இது ஐந்தாவது இடத்தில் இருக்கிறது. செம்பரம்பாக்கம், செங்குன்றம், பூண்டி, மற்றும் சோழவரம் ஏரிகளின் தற்போதையை நிலை கேட்டால், சென்னைவாசிகளுக்கு யாரும் பெண் குடுக்கவே தயங்குவார்கள். செம்பரம்பாக்கம் ஏரியில் தண்ணீர் இல்லாததால், மீன்கள் செத்து கருவாடாகி கிடக்கும் போட்டோக்கள் வெளியாகி உள்ளது.

water lorry

வானிலை குறித்து செய்திகள் வெளியிட்டு, தமிழகம் முழுக்க தனக்கென வாசகர் வட்டத்தை உருவாக்கி வைத்திருக்கும் தமிழ்நாடு வெதர்மேன், பிரதீப் ஜான்கூட இதுகுறித்து ட்வீட் ஒன்றை வெளியிட்டிருக்கிறார். செம்பரம்பாக்கம் மற்றும் சோழவரம் ஏரிகள் முற்றிலும் வறண்டுவிட்ட நிலையில், சென்னையின் ஒரே நம்பிக்கை வீராணம் ஏரி மட்டுமே. இதேநிலை தொடர்ந்தால், ஜூலைக்குள் மொத்த தண்ணீரும் போயே போயிந்தி என்று திகிலூட்டுகிறார் பிரதீப

tweet

மழை பெய்யாமல் போனால், அரசு என்ன செய்ய முடியும்? எடப்பாடியிடம் என்ன மந்திரகோலா இருக்கிறது என அதிமுக தொண்டர்கள் கோவம் கொள்ளக்கூடும். ஆந்திர அரசிடம் பேசி, கிருஷ்ணா நதிநீரை உரிய நேரத்தில் கொண்டுவர தவறியது எடப்பாடியாரின் தவறன்றி, வேறு யாரை குறைகூற முடியும்? இதுவே ஏரிக்கு நடுவே ரோடு போடணும்னா, துண்டை உதறிகிட்டு சம்பந்தியை அழைத்துவந்து டெண்டர் குடுத்திருப்பார் எடப்பாடியார். இன்னும் மூணு நாள்தானே, காத்திருப்போம்! நல்ல வழி பிறக்காமலா போகும்?

Most Popular

ரவுண்டுகட்டும் சிபிஐ – திகிலில் திமுக

திமுகவினரை இலக்கு வைத்து சிபிஐ உள்ளிட்ட மத்திய அமைப்பினர் நடத்திவரும் புலிப் பாய்ச்சல் அந்தக் கட்சியினரை திகிலில் மூழ்கடித்துள்ளது.’’ அடுத்தது அவர்தான், இல்லை இவர்தான்’’ என்கிற பயம் கலந்த பேச்சுக்கள்...

ரெய்னா இல்லாததுதான் CSK தொடர் தோல்விகளுக்குக் காரணமா? #IPL

மூன்று முறை ஐபிஎல் கோப்பையை வென்ற டீம் சென்னை சூப்பர் கிங்ஸ். ஆனால், இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் மூன்று போட்டிகளில் ஆடியுள்ள CSK, ஒன்றில் மட்டும் வெற்றியும் மற்ற...

பிரபல திரைப்பட இயக்குநர் துரை செந்தில்குமாருக்கு நேர்ந்த சோகம்!

பிரபல திரைப்பட இயக்குநர் துரை செந்தில்குமார் தந்தை இன்று காலமானார். அவருக்கு வயது 67. நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில்...

எஸ்.பி.பிக்காக காத்திருந்த “ஆயிரம் நிலவே வா”

தனது முதல் பாடலான ஆயிரம் நிலவே வா பாடல் வாய்ப்பு எப்படி அமைந்தது என்பது குறித்து எஸ்.பி.பி ஒரு வீடியோ வெளியிட்டிருந்தார். அதில் கூறுகையில்,கல்லூரியில் படித்துக் கொண்டே, சினிமாவில் பாட...
Do NOT follow this link or you will be banned from the site!