70வது குடியரசு தின விழா: தலைநகரில் கொடியேற்றி மரியாதை செலுத்திய குடியரசு தலைவர்

 

70வது  குடியரசு தின விழா:  தலைநகரில் கொடியேற்றி மரியாதை செலுத்திய குடியரசு தலைவர்

நாட்டின் 70வது குடியரசு தினத்தையொட்டி, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கொடியேற்றி மரியாதை செலுத்தினார்.

புதுதில்லி: நாட்டின் 70வது குடியரசு தினத்தையொட்டி, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கொடியேற்றி மரியாதை செலுத்தினார்.

குடியரசு தின விழா நாடு முழுவதும் இன்று கொண்டாடப்படுகிறது. இதன் காரணமாக தலைநகர்  டெல்லியில்  நடைபெற்று வரும்  நிகழ்ச்சியில் நாட்டின் மூத்த குடிமகன் ராம்நாத் கோவிந்த் கொடியேற்றி மரியாதை செலுத்தினார்.

modi

அவருடன் பிரதமர் நரேந்திர மோடி, நிர்மலா சீதாராமன், வெங்கையா நாயுடு உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதை தொடர்ந்து பிரமாண்ட  அணிவகுப்பைப் குடியரசு தலைவர் பார்வையிட்டார். இதையொட்டி உச்சக்கட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

delhi

இந்நிகழ்ச்சியில் தென்னாப்பிரிக்க அதிபர் சிரில் ராமபோசா சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டுள்ளார். இந்திய தேசிய இராணுவத்தில் இடம் பெற்றிருந்த 98 முதல் 100 வயதுடைய 4 வீரர்கள் அணிவகுப்பில் பங்கேற்றனர்.

republic

இந்த அணிவகுப்பில் அமெரிக்காவில் இருந்து வாங்கப்பட்ட எம்-77 ஏ2 அல்ட்ரா லைட் ஹோவிட்ஸர் என்ற நவீன ஆயுதம், மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் தயாரிக்கப்பட்ட இன்ஜின் இல்லாத ரயிலான டிரெயின் 18 மற்றும் புல்லட் ரயில்களின் மாதிரிகள், உயிரி எரிபொருள் பயன்படுத்தப்படும் ஏ.என். 32 விமானம், மத்திய அரசின் சாதனைகளை விளக்கும் அலங்கார ஊர்திகள் இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது.