“7 ஆயிரம் ஜெலட்டின் குச்சிகள்; 7,500 டெட்டனேட்டர்” : தக்காளி வேனில் வெடி பொருட்கள் கடத்தல்!

“7 ஆயிரம் ஜெலட்டின் குச்சிகள்; 7,500 டெட்டனேட்டர்” : தக்காளி வேனில் வெடி பொருட்கள் கடத்தல்!

காய்கறி வண்டியில் வெடிப்பெருட்கள் கடத்திய தமிழகத்தை சேர்ந்த 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

“7 ஆயிரம் ஜெலட்டின் குச்சிகள்; 7,500 டெட்டனேட்டர்” : தக்காளி வேனில் வெடி பொருட்கள் கடத்தல்!

கேரளா மாநிலத்தில் உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பால் அங்குள்ள சோதனை சாவடிகளில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் நேற்று இரவு சோதனை சாவடியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர். அப்போது சேலத்திலிருந்து தக்காளி லோட் கொண்டுவந்த மினி லாரியை போலீசார் தடுத்தி நிறுத்தினர்.

“7 ஆயிரம் ஜெலட்டின் குச்சிகள்; 7,500 டெட்டனேட்டர்” : தக்காளி வேனில் வெடி பொருட்கள் கடத்தல்!

அவர்கள் நடத்திய சோதனையில், லாரியில் ஜெலட்டின் குச்சிகள் மற்றும் டெட்டனேட்டர்கள் பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதை தொடர்ந்து மினி லாரியை ஓட்டி வந்த பிரபு, ரவி இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தினர். அதில், அவர்கள் அனுமதியின்றி சட்ட விரோதமாக சேலத்தில் இருந்து கேரள மாநிலம் ஆலுவாவிற்கு ஜெலட்டின் குச்சிகள் மற்றும் டெட்டனேட்டர்கள் கடத்த முயன்றது தெரியவந்தது. இதை தொடர்ந்து 7 ஆயிரம் ஜெலட்டின் குச்சிகள், 7,500 டெட்டனேட்டர்களை போலீசார் பறிமுதல் செய்தது குறிப்பிடத்தக்கது.