“எந்த அறிகுறியும் இல்லை”..ஒரே நாளில் கொரோனாவால் 7 பேர் உயிரிழப்பு!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கடும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவிலேயே மகாராஷ்டிர மாநிலத்தை அடுத்து அதிகமாக பாதிக்கப்பட்ட மாநிலம் தமிழகம் தான். அதனால், கொரோனா தடுப்பு நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. நேற்று ஒரே நாளில் 1,974 கொரோனா உறுதி செய்யப்பட்டு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 44,661 அதிகரித்துள்ளது. இந்திய அளவில் தமிழகத்தில் தான் குறைந்த அளவில் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரை இல்லாத அளவுக்கு நேற்று மட்டுமே 38 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளதால், தமிழகத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 435 ஆக அதிகரித்துள்ளது. நேற்று உயிரிழந்த 38 பேரில் தனியார் மருத்துவமனையில் 16 பேரும், அரசு மருத்துவமனைகளில் 22 பேரும் சிகிச்சை பெற்று வந்ததாக சுகாதார துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் கொரோனாவால் உயிரிழந்தவர்கள் 7 பேர் எந்த வித அறிகுறியும் இல்லாமல் இறந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா அறிகுறி இல்லாமலே மக்கள் உயிரிழப்பது மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இதுவரை 41 பேர் அறிகுறி இல்லாமல் இறந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Most Popular

மகாராஷ்டிரா நிலவரம் தொடர்பாக சரத் பவார் தனது கட்சி தலைவர்களுடன் மட்டும் ஆலோசனை…

மகாராஷ்டிராவில் முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையில், சிவ சேனா, தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சிகிளன் மகா விகாஸ் அகாடி கூட்டணி அரசு நடைபெற்று வருகிறது. தற்போது அம்மாநிலம் கொரோனா வைரஸால் கடுமையாக...

அமெரிக்காவிலும் களைகட்டிய ராமர் கோயில் பூமிபூஜை கொண்டாட்டங்கள்!

அயோத்தி ராமர் கோயில் பூமிபூஜை விழாவை அமெரிக்காவிலும் சிறப்பாக கொண்டாடியுள்ளனர் அங்குள்ள இந்தியர்கள். அயோத்தி ராமர் கோவில் அடிக்கல் நாட்டு விழா இன்று சிறப்பாக நடந்து முடிந்தது. இதில் மொத்தம் 200 மத தலைவர்களுக்கு...

அண்ணாவின் கொள்ளுப்பேத்தி குடிமைப் பணி தேர்வில் வெற்றி – உதயநிதி வாழ்த்து

2019 ஆம் ஆண்டிற்கான சிவில் சர்வீஸ் தேர்வு செப்டம்பர் மாதம் நடைபெற்றது. அதில் தேர்ச்சியானவர்களுக்கு கடந்த பிப்ரவரி மாதம் நேர்காணல் நடத்தப்பட்டது. அதன் பிறகு கொரோனா பாதிப்பால் தேர்வு முடிவுகள் வெளியாகாமல் இருந்தது....

புதுச்சேரியில் கொரோனா தொற்று உறுதியானவர்கள் குடும்பத்துடன் தலைமறைவு!

புதுச்சேரி மாநிலத்தில் இன்று ஒரே நாளில் அதிகபட்சமாக 286 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அதேபோல் அதிகபட்சமாக ஒரே நாளில் 7பேர் உயிரிழந்துள்ளனர். இவர்களில் 182 நபர்கள் புதுச்சேரியிலும், 21 பேர்...