பட்டியலினத்தவரை காலில் விழ வைத்த சம்பவம்: 7 பேர் கைது!

 

பட்டியலினத்தவரை காலில் விழ வைத்த சம்பவம்: 7 பேர் கைது!

கோவில்பட்டி அருகே பட்டியலினத்தவரை காலில் விழ வைத்த சம்பவத்தில் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே உள்ள ஓலைக்குளம் பகுதியில் வசித்து வருபவர் பால்ராஜ் (55). பட்டியலினத்தை சேர்ந்த இவர் ஆடு மேய்க்கும் தொழில் செய்து வந்த நிலையில், இவரது ஆடு வேறு ஒருவரின் நிலத்தில் மேய்ந்ததால் பிரச்னை எழுந்தது. அப்பகுதியில் ஆதிக்க சாதியினர் என சொல்லிக் கொள்ளும் சிலர், ஆடு தன் நிலத்தில் மேய்ந்ததால் பால்ராஜை காலில் விழுந்து கும்பிடும் படி செய்தனர்.

பட்டியலினத்தவரை காலில் விழ வைத்த சம்பவம்: 7 பேர் கைது!

இந்த வீடியோ இணையத்தளத்தில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. இது தொடர்பாக பால்ராஜ் அளித்த புகாரின் பேரில், போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில், இச்சம்பவத்தில் ஈடுபட்ட சிவசங்கு, சங்கிலிபாண்டி, உடையம்மாள் உள்ளிட்ட 7 பேர் கைது செய்யப்பட்டிருப்பதாக தூத்துக்குடி ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்தார்.

பட்டியலினத்தவரை காலில் விழ வைத்த சம்பவம்: 7 பேர் கைது!

பால்ராஜின் குடும்பத்துக்கு வீட்டு மனை பட்டா மற்றும் பசுமை வீடு வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாகவும் வன்கொடுமை பிரிவில் கைதானவர்கள் மீது வழக்குப் பதியப்பட்டிருப்பதால் பால்ராஜ்-க்கு நிவாரணம் வழங்கப்படும் என்றும் அவர் கூறினார்.