ஏடிஎம் பணம் எடுக்க, சிலிண்டர் வாங்க புதிய கட்டுப்பாடுகள்: அன்றாட வாழ்க்கையில் தாக்கம் ஏற்படுத்துமா?

ஏடிஎம் பணம் எடுக்க, சிலிண்டர் வாங்க புதிய கட்டுப்பாடுகள்: அன்றாட வாழ்க்கையில் தாக்கம் ஏற்படுத்துமா?

கொரோனா பேரிடர் நெருக்கடிக்குப் பின் பிப்ரவரி 1ஆம் தேதி முதல் அமல்படுத்தப்படும் புதிய விதிகள் மற்றும் மாற்றங்கள் நாட்டு மக்களின் அன்றாட வாழ்க்கையில் எந்த மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதைப் பார்க்கலாம். குறிப்பாக, ஆறு புதிய மாற்றங்கள் குறித்து விளக்கமாகப் பார்க்கலாம்.

ஏடிஎம் பணம் எடுக்க, சிலிண்டர் வாங்க புதிய கட்டுப்பாடுகள்: அன்றாட வாழ்க்கையில் தாக்கம் ஏற்படுத்துமா?

புதிய கொரோனா விதிமுறைகள்:

கடந்த நான்கு மாதங்களாக கொரோனாவின் தாக்கம் இந்தியாவில் படிப்படியாகக் குறைந்துகொண்டிருப்பதாக வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். இதனைக் கருத்தில் கொண்டு கொரோனா கட்டுப்பாடுகளை மேலும் தளர்வாக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி, திரையரங்கில் 100 சதவீத பார்வையாளர்களை அனுமதிக்க மத்திய அரசு ஆணை பிறப்பிக்க உள்ளது. பெரும்பாலான மாநிலங்கள் பொதுத் தேர்வுக்காக 10, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்குப் பள்ளிகளைத் திறக்க அனுமதி வழங்கிவிட்டன. அதேபோல மற்ற வகுப்புகளையும் கல்லூரிகளையும் திறக்க அனுமதி வழங்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஏடிஎம் பணம் எடுக்க, சிலிண்டர் வாங்க புதிய கட்டுப்பாடுகள்: அன்றாட வாழ்க்கையில் தாக்கம் ஏற்படுத்துமா?

ஆயுள் சான்று சமர்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிப்பு:

கொரோனா லாக்டவுனால் மற்றவர்களைக் காட்டிலும் வயது முதிர்ந்தவர்களை அதிகம் பாதிப்புள்ளாகியிருக்கின்றனர். அவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு ஓய்வூதியம் பெறுவதற்கு ஆயுள் சான்றிதழைச் சமர்பிக்கும் கால அவகாசத்தை இந்தாண்டு பிப்ரவரி 28ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஏடிஎம் பணம் எடுக்க, சிலிண்டர் வாங்க புதிய கட்டுப்பாடுகள்: அன்றாட வாழ்க்கையில் தாக்கம் ஏற்படுத்துமா?

பாஸ்டேக் பிப்ரவரி 15 முதல் கட்டாயம்:

நாடு முழுவதும் நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் வாகனங்கள் எளிதாக கடந்து செல்லகடந்த 2016 முதல் பாஸ்டேக் (FASTag) என்ற மின்னணு கட்டண பரிமாற்ற திட்டம் அமல்படுத்தப்பட்டது. ஜனவரி 1ஆம் தேதி முதல் இந்த பாஸ்டேக் முறையை அனைத்து வாகனங்களும் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும் என சாலை போக்குவரத்து அமைச்சகம் அறிவித்தது. தற்போது பிப்ரவரி 15ஆம் தேதி கால அவகாசம் வழங்கியுள்ளது. அதுவரை நேரடி பணப் பரிமாற்றம் செய்துகொள்ளலாம்.

ஏடிஎம் பணம் எடுக்க, சிலிண்டர் வாங்க புதிய கட்டுப்பாடுகள்: அன்றாட வாழ்க்கையில் தாக்கம் ஏற்படுத்துமா?

இனி ஒவ்வொரு மாசமும் இத கவனிங்க:

இனி ஒவ்வொரு மாதமும் முதல் தேதியில் எல்பிஜி சமையல் எரிவாயு சிலிண்டர் விலையில் மாற்றம் இருக்கும். சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப இந்த மாற்றம் செய்யப்படும். அதன்படி, இன்று கேஸ் சிலிண்டர் விலையில் மாற்றம் இருக்கலாம். ஆகவே ஒவ்வொரு மாதமும் எரிவாயு சிலிண்டரின் விலையைக் கவனிக்க தவறாதீர்கள்.

ஏடிஎம் பணம் எடுக்க, சிலிண்டர் வாங்க புதிய கட்டுப்பாடுகள்: அன்றாட வாழ்க்கையில் தாக்கம் ஏற்படுத்துமா?

வாடிக்கையாளர்களின் பாதுகாப்புக்காக புதிய விதிமுறைகள்:

நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான பஞ்சாப் நேஷனல் வங்கி பிப்ரவரி 1 முதல் ஏடிஎம்மில் பணம் எடுப்பதில் புதிய விதிகளை அமல்படுத்துகிறது. அதன்படி EVM சிப் அல்லாத ஏடிஎம்களில் பணம் எடுக்க கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. வாடிக்கையாளர்கள் அனைவரும் ஆன்லைன் வழி பணப் பரிமாற்றத்தை அதிகப்படுத்த வலியுறுத்தியிருக்கிறது. EVM அல்லாத ஏடிஎம் என்றால் பரிவர்த்தனையின்போது நமது ஏடிஎம் கார்டை பிடித்து வைத்திருக்காத ஏடிஎம் இயந்திரங்கள்.

ஏடிஎம் பணம் எடுக்க, சிலிண்டர் வாங்க புதிய கட்டுப்பாடுகள்: அன்றாட வாழ்க்கையில் தாக்கம் ஏற்படுத்துமா?

மீண்டும் தொடங்கும் இ-கேட்டரிங் சேவை:

கொரோனா காரணமாக ரயில் நிலையங்களில் இ-கேட்டரிங் சேவை நிறுத்தப்பட்டிருந்தது. பிப்ரவரி 1ஆம் தேதி முதல் தேர்ந்தெடுக்கப்பட்ட 62 ரயில் நிலையங்களில் மீண்டும் அந்தச் சேவை தொடங்கப்படும். இந்த அறிவிப்பை இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா கழகம் (IRCTC) வெளியிட்டுள்ளது.