”குறைந்த விலையில் இ7 ஃபோன் – மோட்டோரோலா திட்டம்”!

 

”குறைந்த விலையில் இ7 ஃபோன் – மோட்டோரோலா திட்டம்”!

மோட்டோரோலா நிறுவனம் இ7 என்ற புதிய குறைந்த விலை ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.ஸ்மார்ட்போன் விற்பனையில் முன்னணி நிறுவனங்களுள் ஒன்றாக விளங்கும். மோட்டோரோலா, சமீபத்தில் தான் மோட்டோ இ7 பிளஸ் ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகப்படுத்தியது. இந்நிலையில் விரைவில் குறைந்த விலை பட்ஜெட் ஸ்மார்ட்போன் பிரிவில் இ7 என்ற புதிய போனை அறிமுகப்படுத்த மோட்டோரோலா திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

”குறைந்த விலையில் இ7 ஃபோன் – மோட்டோரோலா திட்டம்”!

இந்த புதிய போன், 6.2 இன்ச் எச்டி பிளஸ் திரை கொண்டது என்றும், 2ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி மெமரி, 3550 எம்ஏஎச் பேட்டரி மற்றும் 5 வாட்ஸ் சார்ஜருடன் வெளிவர உள்ளதாக கூறப்படுகிறது. மேலும், பின்புறத்தில் 13எம்பி மற்றும் 2 எம்பி என இரண்டு கேமராக்களும் முன்புறத்தில் 5 எம்பி செல்ஃபி கேமராவுடன் அறிமுகமாக உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.மேலும் விரல்ரேகை சென்சார், வைபை, புளூடூத், 3.5 எம்எம் ஹெட்போன் ஜாக், என ஏராளமான வசதிகளுடன் வரும் மோட்டோ இ7 போன், இ7 பிளஸ் போனை விட குறைந்த விலையிலேயே அறிமுகப்படுத்தப்படும் என்று கூறப்படுகிறது. இந்தியாவில் மோட்டோ இ7 பிளஸ் போன், 9,499 ரூபாய்க்கு அறிமுகப்படுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.