வாட்ஸ் அப் குரூப்பில் ஜெய் ஸ்ரீ ராம் சொல்லை பயன்படுத்திய 7 பேரை கட்சியிலிருந்து நீக்கிய காங்கிரஸ் மாணவர் பிரிவு

வாட்ஸ் அப் குரூப்பில் ஜெய் ஸ்ரீ ராம் சொல்லை பயன்படுத்திய 7 பேரை கட்சியிலிருந்து நீக்கிய காங்கிரஸ் மாணவர் பிரிவு

ஜார்க்கண்டில் வாட்ஸ் அப் குரூப்பில் ஜெய் ஸ்ரீ ராம் சொல்லை பயன்படுத்திய 7 பேரை கட்சியிலிருந்து காங்கிரஸ் மாணவர் பிரிவு இடைநீக்கம் செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காங்கிரஸ் கட்சியின் மாணவர்கள் பிரிவு இந்திய தேசிய மாணவர்கள் சங்கம் (என்.எஸ்.யூ.ஐ.). ஜார்க்கண்ட் மாநில என்.எஸ்.யூ.ஐ. தனியாக ஒரு வாட்ஸ் அப் குழுவை நடத்தி வருகிறது. இந்த சூழ்நிலையில் அந்த வாட்ஸ்அப் குழுவில், ஜெய் ஸ்ரீ ராம் என்று சொல்லை வாழ்த்து சொல்லாக 7 பேர் பயன்படுத்தியதாக தெரிகிறது. அந்த 7 பேரும் என்.எஸ்.யூ.ஐ.-ன் கிழக்கு சிங்பும் மாவட்ட கமிட்டியை சேர்ந்தவர்கள். இதனையடுத்து அந்த கமிட்டியின் தலைவர் ரோஸ் டிர்கி அந்த 7 பேரையும் 3 ஆண்டுகளுக்கு கட்சியிலிருந்து நீக்கினார்.

வாட்ஸ் அப் குரூப்பில் ஜெய் ஸ்ரீ ராம் சொல்லை பயன்படுத்திய 7 பேரை கட்சியிலிருந்து நீக்கிய காங்கிரஸ் மாணவர் பிரிவு
இந்திய தேசிய மாணவர்கள் சங்கம்

கட்சியிலிருந்து நீக்கப்பட்ட தொண்டர்களில் ஒருவர் இது தொடர்பாக கூறுகையில், நாங்கள் அனைவரும் என்.எஸ்.யூ.ஐ. தொண்டர்கள். நாங்கள் ரோஸ் டிர்கியால் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளோம். அவரை பொறுத்தவரை, நாங்கள் வாட்ஸ் அப் குழுவில் இருக்க விரும்பினால் நாங்கள் ஜெ ஸ்ரீ ராம் எழுத முடியாது. தெய்வத்தின் பெயரை எழுதுவது தவறா என்று அவரிடம் கேட்க விரும்புகிறோம். அவள் அதை ஏன் மோசமாக சொல்கிறார்? என்று தெரிவித்தார்.

வாட்ஸ் அப் குரூப்பில் ஜெய் ஸ்ரீ ராம் சொல்லை பயன்படுத்திய 7 பேரை கட்சியிலிருந்து நீக்கிய காங்கிரஸ் மாணவர் பிரிவு
பா.ஜ.க.

மேலும், கட்சியிலிருந்து நீக்கியதற்கு எதிர்ப்பு தெரிவிக்க, உயர் கட்டளை மற்றும் மாநில தலைவருக்கும் கடிதம் எழுதுவோம் என்று இடைநீக்கம் செய்யப்பட்ட தொண்டர்கள் தெரிவித்தனர். இந்த விவகாரத்தை குறிப்பிட்டு, காங்கிரஸ் இந்து விரோத கட்சி என்று பா.ஜ.க. குற்றம் சாட்டியுள்ளது மேலும் ஜெய் ஸ்ரீ ராம் சொல்வது குற்றமா என்றும் பா.ஜ.க. கேள்வி எழுப்பியுள்ளது.