திமுக ஆட்சியில் 7 லட்சம் ரேஷன் கார்டுகள் விண்ணப்பம்: 1,35,730 விண்ணப்பங்கள் நிராகரிப்பு!

திமுக ஆட்சியில் 7 லட்சம் ரேஷன் கார்டுகள் விண்ணப்பம்:  1,35,730 விண்ணப்பங்கள் நிராகரிப்பு!

கடந்த 3 மாதத்தில் 7 லட்சம் நபர்கள் புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பித்துள்ளதாக உணவு வழங்கல் துறை தெரிவித்துள்ளது.

திமுக ஆட்சியில் 7 லட்சம் ரேஷன் கார்டுகள் விண்ணப்பம்:  1,35,730 விண்ணப்பங்கள் நிராகரிப்பு!

திமுக ஆட்சி பொறுப்பேற்றவுடன் திமுக அரசு பல முக்கிய திட்டங்களை அறிவித்தது. அந்த வகையில் புதிதாக குடும்ப அட்டை விண்ணப்பிப்பவர்களுக்கு 15 நாட்களில் ரேஷன் கார்டு வழங்கப்படும் என கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியசாமி தெரிவித்திருந்தார். இந்த அறிவிப்புக்கு பிறகு லட்சக்கணக்கில் குடும்ப அட்டை கேட்டு பொதுமக்கள் விண்ணப்பித்திருந்தனர்.இதற்கு மிக முக்கிய காரணம் குடும்பத் தலைவிகளுக்கு மாதம்தோறும் 1000 ரூபாய் வழங்கப்படும் என்று தமிழக அரசின் அறிவிப்பும் தான்.

திமுக ஆட்சியில் 7 லட்சம் ரேஷன் கார்டுகள் விண்ணப்பம்:  1,35,730 விண்ணப்பங்கள் நிராகரிப்பு!

இந்நிலையில் திமுக ஆட்சிக்கு வந்த மே மாதம் முதல் ஜூலை வரை புதிதாக ஸ்மார்ட் ரேஷன் கார்டுக்கு 7.19 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். மே மாதத்தில் 1.26 லட்சம், ஜூனில் 1.57 லட்சம் ,ஜூலை மாதத்தில் 2.61 லட்சம் பேர் புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பித்துள்ளனர். 4.52 லட்சம் ரேஷன் கார்டுகள் விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டு 1.35 லட்சம் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பித்தவர்களில் 3.38 லட்சம் பேருக்கு புதிய ஸ்மார்ட் ரேஷன் கார்டு தரப்பட்டுள்ளன என்று உணவு வழங்கல் துறை தெரிவித்துள்ளது.