• April
    04
    Saturday

Main Area

Main



7 லட்சம் அரசு வேலைகள் காலியாதான் இருக்கு..... ஆனா நாங்கதான் ஆள் போடமாட்டோம்

சந்தோஷ் கங்குவார்
சந்தோஷ் கங்குவார்

நம் நாட்டின் மக்கள் தொகையில் கணிசமான பகுதி இளம் தலைமுறையினர் உள்ளனர். இவர்களுக்கு நல்ல கல்வி கிடைத்தாலும் வேலை வாய்ப்பு கிடைப்பது குதிரை கொம்பாக இருக்கிறது. நம் நாட்டில் தற்போது வேலைவாய்ப்பு நிலவரம் கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மோசமாக உள்ளதாக தகவல் கூறுகின்றன. அதேசமயம் அரசாங்கத்தில் சுமார் லட்சக்கணக்கான பணியிடங்களுக்கு ஆள் போடமால் உள்ளதாக மத்திய அரசே தைரியமாக கூறுகிறது. காலியாக உள்ள அரசாங்க வேலைகளுக்கு ஆட்களை நியமனம் செய்தாலே லட்சக்கணக்கான குடும்பங்கள் வாழும்.

வேலை வாய்ப்பு

நாடாளுமன்றத்தில், காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் தீபக் பாய்ஜி, பா.ஜ. நாடாளுமன்ற உறுப்பினர் தர்ஷனா ஜர்தோஷ் ஆகியோர் அரசு துறைகளில் உள்ள பணியாளர்கள் காலியிடங்கள் குறித்து கேள்வி கேட்டு இருந்தனர். அதற்கு மத்திய தொழிலாளர் துறை அமைச்சர் சந்தோஷ் கங்குவார் பதில் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

ரயில்வே பணியாளர்கள்

2018 மார்ச் இறுதி நிலவரப்படி, அரசு அமைச்சகங்கள் மற்றும் துறைகளில் மட்டும் சுமார் 7 லட்சம் பணியிடங்கள் காலியாக உள்ளது. அதிகபட்சமாக ரயில்வே துறையில் மட்டும் 2.6 லட்சம் பணியிடங்களில் ஆட்கள் நிரப்படமால் உள்ளனர். மத்திய அரசு அந்த பணியிடங்களை பணியாளர்களை நியமனம் செய்ய முன்னுரிமை கொடுக்கும் அதனுடன் வேலைவாய்ப்பு உருவாக்குதல் மற்றும் பணியாளர் திறனை மேம்படுத்தவும் நடவடிக்கை எடுக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

2018 TopTamilNews. All rights reserved.