• July
    23
    Tuesday

Main Area

Main



கர்நாடகாவில் 6 பேரை காவு வாங்கிய கோயில் பிரசாதம்

karnataka
karnataka
Loading...

பெங்களூரு: கர்நாடகாவில் கோயில் பிரசாதம் சாப்பிட்ட 6 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலம் சுல்வாடி கிராமத்தில் அமைந்துள்ளது மாரம்மா கோயில். இன்று வெள்ளிக்கிழமை என்பதால் இக்கோயிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது. பூஜை முடிந்ததும் பக்தர்கள் அனைவருக்கும் கோயில் பிரசாதமாக ”வெஜ் புலாவ்” வழங்கப்பட்டது.

ஆனால் பிரசாதம் சாப்பிட்ட பக்தர்கள் சிறிதுநேரத்தில் வாந்தி எடுத்து மயக்கமடைந்தனர்.அதில் 15 வயது சிறுமி, 2 பெண்கள் உள்பட 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். சிலரது நிலைமை மோசமானது. இதையடுத்து, சுமார் 40-க்கும் மேற்பட்ட பக்தர்கள் அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 11 பேரின் நிலைமை மோசமாக உள்ளது. மேலும் பிரசாதம் சாப்பிட்ட 60-க்கும் மேற்பட்ட காகங்களும் இறந்துகிடந்தன. 

கோயில் பிரசாதம் சாப்பிட்ட பக்தர்கள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. மேலும் இதுதொடர்பாக காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

2018 TopTamilNews. All rights reserved.