50 ஆயிரம் பேருக்கு மேல் கொரோனாவுக்கு பலிகொடுத்த 7 நாடுகள்!

 

50 ஆயிரம் பேருக்கு மேல் கொரோனாவுக்கு பலிகொடுத்த 7 நாடுகள்!

கொரோனாவின் தாக்குதல் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. சில நாடுகளில் கொரோனா பரவல் குறைந்தாலும், பல நாடுகளில் கடுமையாக அதிகரிக்கிறது. மேலும், சில நாடுகளில் இரண்டாம் அலை கொரோனா பரவல் தீவிரமாகப் பரவி வருகிறது.

 உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டிப்போர். 6 கோடியே 1 லட்சத்து  5 ஆயிரத்து 740 பேர். இன்றைய காலைவரை, கொரோனா நோய்த் தொற்றிலிருந்து குணம் அடைந்து வீடு திரும்பியோர் 4 கோடியே 15 லட்சத்து 53 ஆயிரத்து 773 நபர்கள்.

50 ஆயிரம் பேருக்கு மேல் கொரோனாவுக்கு பலிகொடுத்த 7 நாடுகள்!

கொரோனா நோய்த் தொற்றால் சிகிச்சை பலன் அளிக்காது இறந்தவர்கள் 14 லட்சத்து 14 ஆயிரத்து 868 பேர்.  இறப்போர் சதவிகிதம் குறைந்துகொண்டே வந்தாலும் புதிய நோயாளிகளும் அதிகரித்து வருகிறார்கள். தற்போது சிகிச்சை எடுத்துக்கொண்டிப்போர் 1,71,37,099 பேர்.

உலகளவில் தற்போதைய இறப்பு விகிதம் 3 சதவிகிதமாக உள்ளது. ஆனால், இறப்பு எண்ணிக்கை கடுமையாக உயர்ந்துவருகிறது. அதில் 50 ஆயிரத்துக்கும் மேல் உயிரிழப்புகளைச் சந்தித்திருக்கும் நாடுகளின் பட்டியலைப் பார்ப்போம்.

50 ஆயிரம் பேருக்கு மேல் கொரோனாவுக்கு பலிகொடுத்த 7 நாடுகள்!

2,65,891 பேரை கொரோனாவுக்குப் பலி கொடுத்த அமெரிக்காவே இந்தப் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. நேற்று மட்டுமே அமெரிக்காவில் 2,187 பேர் இறந்திருக்கிறார்கள்.

1,70,179 பேர் பிரேசில் நாட்டில் கொரோனா பாதிக்கப்பட்டு இறந்துள்ளனர். ஒன்றரை லட்சம் இறப்புகளைக் கடந்த இரண்டுகளில் இதுவும் ஒன்று. நேற்று மட்டும் பிரேசிலில் 638 பேர் இறந்துள்ளனர்.

1,34,743 பேரைப் பலி கொடுத்த இந்தியா பட்டியலில் மூன்றாம் இடத்தில் உள்ளது. நேற்று மட்டுமே இந்தியாவில் 489 பேர் மரணமடைந்துள்ளனர்.

50 ஆயிரம் பேருக்கு மேல் கொரோனாவுக்கு பலிகொடுத்த 7 நாடுகள்!

நான்காம் இடத்தில் உள்ள நாடான மெக்சிகோவில் 1,02,739 பேர் கொரோனாவால் இறந்துள்ளனர். இந்த நாட்டில் இறப்பு சதவிகிதம் 13 ஆக உள்ளது. நேற்று மட்டுமே இங்கு 250 பேர் இறந்துள்ளனர்.

ஐந்தாம் இடத்தில் உள்ள இங்கிலாந்தில் 55,838 பேரை கொரொனா மரணமடைய செய்துள்ளது. இங்கிலாந்தில் நேற்று மட்டுமே 608 பேர் இறந்துள்ளனர்.

ஆறாம் இடத்தில் உள்ள இத்தாலியில் கொரோனா மரணம் 51,306. நேற்று மரணம் அடைந்தவர்கள் 853.

50,237 பேரை கொரோனாவுக்கு பலி கொடுத்து பிரான்ஸ் ஏழாம் இடத்தில் உள்ளது. இங்கு மட்டுமே நேற்று 592 பேர் மரணமடைந்துள்ளனர்.