10 ஆயிரத்துக்கு மேல் கொரோனா தொற்று அதிகரித்த 7 நாடுகள்!

 

10 ஆயிரத்துக்கு மேல் கொரோனா தொற்று அதிகரித்த 7 நாடுகள்!

கொரோனா நோய்த் தொற்று சில நாடுகளில் கட்டுப்படுத்தப்பட்டதைப் போல இருந்தது. ஆனால், மீண்டும் பரவத் தொடங்குகிறது. கடந்த இரு நாட்களாக அமெரிக்காவில் 50 ஆயிரத்தைத் தாண்டி பரவி வருகிறது.

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டிப்போர். 3 கோடியே 71 லட்சத்து 13 ஆயிரத்து 717 பேர். கொரோனா நோய்த் தொற்றிலிருந்து குணம் அடைந்து வீடு திரும்பியோர் 2 கோடியே 79 லட்சத்து 504 நபர்கள்.

கொரோனா நோய்த் தொற்றால் சிகிச்சை பலன் அளிக்காது இறந்தவர்கள் 10 லட்சத்து 72 ஆயிரத்து 717 பேர்.

10 ஆயிரத்துக்கு மேல் கொரோனா தொற்று அதிகரித்த 7 நாடுகள்!

நேற்றறு 10 ஆயிரத்துக்கு அதிகமாக நோய்த் தொற்று அதிகரித்த 7 நாடுகள் குறித்துப் பார்ப்போம்.

இந்தியாவில் 73,196 பேராக அதிகரித்து முதல் இடத்தில் உள்ளது. இரண்டாம் இடத்தில் உள்ள அமெரிக்காவில் 60,558 பேரும், மூன்றாம் இடத்தில் உள்ளா பிரேசிலில் 27,651 பேரும் புதிய நோயாளிகளாக அதிகரித்திருக்கிறார்கள்.

10 ஆயிரத்துக்கு மேல் கொரோனா தொற்று அதிகரித்த 7 நாடுகள்!

நான்காம் இடத்தில் உள்ள பிரான்ஸில் 20,339 பேரும், ஐந்தாம் இடத்தில் உள்ள அர்ஜெண்டினாவில் 15,099 பேரும், ஆறாம் இடத்தில் உள்ள இங்கிலாந்தில் 13,864 பேரும், ஏழாம் இடத்தில் உள்ள ரஷ்யாவில் 12,126 பேரும் புதிய நோயாளிகளாக அதிகரித்திருக்கிறார்கள்.

இறப்பு எண்ணிக்கையில் முதல் மூன்று இடங்களில் அமெரிக்கா, பிரேசில், இந்தியா ஆகியவை உள்ளன. நான்காம் இடத்தில் மெக்சிகோ உள்ளது.