Home அரசியல் 7.5% உள் ஒதுக்கீடு – எடப்பாடி ராஜதந்திரத்திற்கு கிடைத்த வெற்றி

7.5% உள் ஒதுக்கீடு – எடப்பாடி ராஜதந்திரத்திற்கு கிடைத்த வெற்றி

ஆர்ப்பாட்டம் இல்லாத, அதேநேரத்தில் அழுத்தமான தனது ராஜதந்திர நடவடிக்கைகளால் முதல்வர் எடப்பாடியின் செல்வாக்கு நாளுக்குநாள் உயர்ந்து வருகிறது. காலம் அடையாளம் காட்டிய இந்தத் தலைவரை தமிழக மக்கள் கொண்டாடி மகிழ்கின்றனர்.


சமநிலையற்ற நீட் தேர்வால் அரசுப் பள்ளியில் பயிலும் ஏழை எளிய மாணவர்கள் பாதிக்கப்படுவதைக் கருத்தில் கொண்டு அவர்களுக்கென 7.5 சதவீத உள் ஒதுக்கீடு மசோதா தமிழக சட்டமன்றத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. முதல்வர் எடப்பாடியின் யோசனையில் உருவான இந்த மசோதா ஒப்புதலுக்காக ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

மசோதாவை அனுப்பிவிட்டு எடப்பாடி சும்மா இருக்கவில்லை.

தாய் மறைவுக்கு தம்மிடம் துக்கம் விசாரிக்க வந்த ஆளுநரிடம் ஓப்புதல் பற்றி வலியுறுத்தினார். 5 அமைச்சர்களை ஆளுநர் மாளிகைக்கு அனுப்பி இது குறித்து விளக்கமளிக்கச் செய்தார். இது தவிர எந்தெந்த வழிகளில் எல்லாம் முடியுமோ அந்தந்த வழிகளில் எல்லாம் ஆளுநருக்கு அழுத்தம் தரப்பட்டது. ஆனால் என்ன காரணத்தினாலோ ஆளுநர் ஒப்புதல் அளிக்கவில்லை.


இது போதாதா எதிர்க் கட்சிகளுக்கு! ‘ ஆளுநரிடம் அடங்கிப் போகிறது எடப்பாடி அரசு. ஆளுநரை எதிர்க்க முதல்வர் எடப்பாடிக்கு தைரியமில்லை’ என ஆளாளுக்கு ஏக வசனத்தில் திட்டித் தீர்த்தனர்.

இந்த காகித அம்புகளைப் பற்றி கவலைப்படாத எடப்பாடி, 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டை எப்படி சாத்தியமாக்குவது என்பதில் மட்டும் கவனம் செலுத்தினார்.


உயரதிகாரிகளுடன் நடத்திய தொடர் ஆலோசனைகளின் விளைவாக 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டிற்கு அரசாணை பிறப்பிக்கப்பட, ஓட்டுமொத்த இந்தியாவும் எடப்பாடியை திரும்பிப் பார்த்தது. பல்வேறு மாநிலங்களில் முதலமைச்சர்களை மீறி ஆளுநர்கள் செயல்பட்டுவரும் நிலையில் எடப்பாடியின் இந்த அதிரடி நடவடிக்கை, தேசிய அளவில் மிகுந்த முக்கியத்துவம் பெற்றது.


அரசாணை பிறப்பிக்கப்பட்டு 24 மணி நேரம் கூட ஆகாத நிலையில் 7.5 சதவீத உள் ஒதுக்கீடு மசோதாவிற்கு ஓப்புதல் அளித்திருக்கிறார் ஆளுநர்.

இது பற்றி நம்மிடம் பேசிய மூத்த பத்திரிகையாளர் ஒருவர்,’’ ஆளுநரின் இந்த ஒப்புதலை முழுக்க முழுக்க முதல்வர் எடப்பாடியின் ராஜதந்திர நடவடிக்கைகளுக்குக் கிடைத்த வெற்றியாகத்தான் சொல்ல வேண்டும். அரசாணை பிறப்பித்து மருத்துவ கவுன்சிலிங்கை தொடங்குமாறு தமிழக சுகாதாரத்துறை செயலாளர் உத்தரவிட்டிருந்த நிலையில் வேறு வழியின்றி ஆளுநர் ஓப்புதல் தந்திருக்கிறார். முரண்டு பிடித்து ஓப்புதல் தந்த நிலையிலும் பதிலுக்கு கௌரவம் பார்க்காமல் ஆளுநரை நேரில் சந்தித்து முதல்வர் நன்றி தெரிவித்திருப்பது, அவரது பெருந்தன்மையை காட்டுகிறது’’ என்றார்.

கல்வியாளர்கள் தரப்பில் பேசியபோது, ‘’ நீட் தேர்வு முடிவுகளால் அரசு பள்ளி மாணவர்களுக்கு ஒற்றை இலக்கத்திலேயே மருத்துவப் படிப்பில் இடம் கிடைக்கும் சூழ்நிலை இருந்தது. ஆனால் முதல்வர் கொண்டுவந்த 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டால் 300க்கும் மேற்பட்ட ஏழை எளிய அரசு பள்ளி மாணவர்களுக்கு தற்போது இடம் கிடைக்கும் சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது.

இந்த வகையில் அரசு பள்ளி மாணவர்களுக்கு எட்டாக் கனியாக இருந்த மருத்துவ படிப்பு, முதல்வர் எடப்பாடியின் அயராத முயற்சிகளால் இப்போது சாத்திய மாகியிருக்கிறது. இதற்காக ஓட்டுமொத்த மாணவர் சமூகமும் முதல்வர் எடப்பாடிக்கு நன்றிக்கடன் பட்டிருக்கிறது’’ என்றார்கள்.


ஆக மொத்தத்தில் முதல்வர் எடப்பாடியுடன் ஆளுநரை சந்தித்துவிட்டு பின்னர் ஊடகங்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் ஜெயக்குமார், ‘’ 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டிற்கு முதல்வர் எடப்பாடியை தவிர வேறு யாரும் சொந்தம் கொண்டாட முடியாது’’ என தெரிவித்தது 100 சதவீதம் உண்மையாகும்.

மாவட்ட செய்திகள்

Most Popular

சம்மர் டூர் பிளான் செய்ய நல்ல வாய்ப்பு… குறைந்த கட்டணம் அறிவிப்பு வெளியிட்ட விமான நிறுவனங்கள்!

வரும் கோடைக் காலத்தில் வெளியூர் செல்ல பிளான் போடுகின்றீர்களா... உங்களுக்காகவே மிகக் குறைந்த கட்டண டிக்கெட்டை போட்டிப் போட்டு அறிவித்துள்ளன இன்டிகோஏர் மற்றும் ஸ்பைஸ்ஜெட். இன்டிகோ...

இந்தியில் ரீமேக்காகும் விஜய்யின் மாஸ்டர் ! ரீமேக் உரிமையைக் கைப்பற்றியது யார் தெரியுமா?

தமிழில் வசூல் சாதனைப் படைத்த மாஸ்டர் இந்தியில் உருவாகுகிறது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு தளபதி விஜய் மற்றும் விஜய்சேதுபதி நடித்து ஜனவரி 13-ஆம் தேதி வெளியான மாஸ்டர்...

வெறும் வயிற்றில் எலுமிச்சை சாரு அருந்துவது நல்லதா… கெட்டதா?

காலையில் எழுந்ததும் காபி, டீ, எனர்ஜி டிரிங்க்ஸ் அருந்துவதை பலரும் வழக்கமாக வைத்துள்ளனர். உடலை ஆரோக்கியமாக வைக்க நினைக்கும் பலர் தேன் கலந்த வெந்நீர், எலுமிச்சை நீர், இளநீர், நீராகாரம்,...

நாளை 166 இடங்களில் 19,073 சுகாதாரப்பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி

தமிழகத்தில் நாளை 166 இடங்களில் சுகாதாரப் பணியாளர்களுக்கு கோவிட் தடுப்பூசி செலுத்தப்படவுள்ளது. இதில் 160 இடங்களில் கோவிஷீல்டு மருந்துகளும் 6 இடங்களில் கோவேக்சினும் வழங்கப்பட உள்ளன.
Do NOT follow this link or you will be banned from the site!