7.5% இடஒதுக்கீடு – ஜன.4ல் 2ஆம் கட்ட மருத்துவ சேர்க்கைக்கான கலந்தாய்வு!

 

7.5% இடஒதுக்கீடு – ஜன.4ல் 2ஆம் கட்ட மருத்துவ சேர்க்கைக்கான கலந்தாய்வு!

7.5% இடஒதுக்கீடு அடிப்படையில் ஜன.4ல் 2ஆம் கட்ட மருத்துவ சேர்க்கைக்கான கலந்தாய்வு நடைபெறும் என்று சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

7.5% இடஒதுக்கீடு – ஜன.4ல் 2ஆம் கட்ட மருத்துவ சேர்க்கைக்கான கலந்தாய்வு!

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான கலந்தாய்வு கடந்த நவம்பர் மாதம் 18 ஆம் தேதி முதல் தொடங்கியது. சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற இந்த கலந்தாய்வில் முதல் மூன்று நாட்கள் அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5% இடஒதுக்கீடு அடிப்படையில் கலந்தாய்வு நடந்தது. அதன்பின் 21 ஆம் தேதி முதல் சிறப்பு பிரிவினருக்கான மருத்துவ கலந்தாய்வில் மாற்றுத் திறனாளிகள், முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுகள் என கலந்து கொண்டனர்.முதற்கட்ட கலந்தாய்வானது கடந்த டிசம்பர் மாதம் 10 ஆம் தேதி நிறைவடைந்தது.

7.5% இடஒதுக்கீடு – ஜன.4ல் 2ஆம் கட்ட மருத்துவ சேர்க்கைக்கான கலந்தாய்வு!

இந்நிலையில் தமிழகத்தில் இரண்டாம் கட்ட மருத்துவ கலந்தாய்வு வரும் 4ஆம் தேதி தொடங்குகிறது. 7.5 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் அரசு பள்ளி மாணவர்களுக்கு வரும் 4ம் தேதி முதல் மருத்துவ கலந்தாய்வு நடக்கிறது 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் இன்னும் 12 இடங்கள் உள்ள நிலையில் 4ஆம் தேதி அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ கலந்தாய்வு நடைபெறும் என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. அதேபோல் ஜனவரி 5 ஆம் தேதி பொதுப்பிரிவு மாணவர்களுக்கான மருத்துவ கலந்தாய்வும் நடைபெறுகிறது.