7.5% ஒதுக்கீடு: தவறவிட்ட மாணவர்களுக்கு மீண்டும் மருத்துவ சீட்!

7.5% ஒதுக்கீடு: தவறவிட்ட மாணவர்களுக்கு மீண்டும் மருத்துவ சீட்!

மருத்துவ படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள் ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. அதன் கீழ், தனியார் கல்லூரிகளில் மருத்துவ இடத்தை பெரும் மாணவர்கள் பலர் கட்டணத்தை செலுத்த முடியாமல் தவித்து வருகின்றனர். அதனால், அந்த மாணவர்களுக்கான கட்டணத்தை திமுக ஏற்கும் என அக்கட்சித் தலைவர் ஸ்டாலின் அறிவித்திருந்த நிலையில் தமிழக அரசே அதனை ஏற்கும் என முதல்வர் பழனிசாமி அறிவித்தார்.

7.5% ஒதுக்கீடு: தவறவிட்ட மாணவர்களுக்கு மீண்டும் மருத்துவ சீட்!

இதனிடையே, சிதம்பரத்தை சேர்ந்த மாணவிகள் தர்ஷினி மற்றும் இலக்கியா ஆகியோருக்கு தனியார் கல்லூரிகளில் மருத்துவ இடம் கிடைத்ததால் அவற்றை தேர்வு செய்யாமல் விட்டனர். தற்போது கட்டணத்தை அரசே ஏற்கும் என அறிவித்திருப்பதால் தங்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்க வேண்டும் என மாணவிகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

7.5% ஒதுக்கீடு: தவறவிட்ட மாணவர்களுக்கு மீண்டும் மருத்துவ சீட்!

அந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மருத்துவக் கல்லூரிகளில் இடம் கிடைத்தும் கட்டணம் செலுத்த முடியாமல் அதனை தவறவிட்ட மாணவர்களுக்கு மீண்டும் மருத்துவ சீட் கிடைக்க ஏற்பாடு செய்யப்படும் என தமிழக அரசு உறுதியளித்துள்ளது.