அரசு பள்ளி மாணவர்களுக்கு மட்டுமே 7.5% உள் ஒதுக்கீடு: முதல்வர் அறிவிப்பு!

 

அரசு பள்ளி மாணவர்களுக்கு மட்டுமே 7.5% உள் ஒதுக்கீடு: முதல்வர் அறிவிப்பு!

மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு மட்டுமே 7.5% உள் ஒதுக்கீடு வழங்க சட்டம் இயற்றப்பட்டுள்ளதாக முதல்வர் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு கடும் பாதிப்பை ஏற்படுத்திய நிலையில், ஒவ்வொரு மாவட்டமாக சென்று முதல்வர் பழனிசாமி நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறார். அந்த வகையில் இன்று நீலகிரி மாவட்டத்துக்கு சென்ற முதல்வர், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை ஆய்வு செய்த பிறகு ரூ.131.57 கோடி மதிப்பிலான 123 புதிய திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.

அரசு பள்ளி மாணவர்களுக்கு மட்டுமே 7.5% உள் ஒதுக்கீடு: முதல்வர் அறிவிப்பு!

இதை தொடர்ந்து முதல்வர் பழனிசாமி உதகையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், ‘நீலகிரியில் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் இருந்து வருகிறது. இதுவரை நீலகிரியில் 39 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். அங்கு இதுவரை 6363 காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டுள்ளது. ரூ.447 கோடி மதிப்பில் அரசு மருத்துவ கல்லூரியுடன் கூடிய அரசு மருத்துவமனை அமைக்கப்பட உள்ளது என தெரிவித்தார்.

மேலும், மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு மட்டுமே 7.5% உள் ஒதுக்கீடு வழங்க சட்டம் இயற்றப்பட்டுள்ளது என்றும் அரசு உதவி பெரும் பள்ளிகளாகவே இருந்தாலும் அவை தனியார் பள்ளிகள் தான் என்றும் கூறினார்.