“7.5% உள்ஒதுக்கீடு- கவர்னர் ஒப்புதலை பெற முதல்வர் நடவடிக்கை ” – செங்கோட்டையன்

“7.5% உள்ஒதுக்கீடு- கவர்னர் ஒப்புதலை பெற முதல்வர் நடவடிக்கை ” – செங்கோட்டையன்

ஈரோடு

மருத்துவப்படிப்பில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள்ஒதுக்கீடு வழங்கும் விவகாரத்தில், ஆளுநரின் ஒப்புதலை பெற முதலமைச்சர் நடவடிக்கை மேற்கொள்வார் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். ஈரோடு மாவட்டம் சாவக்கட்டுபாளையம் பகுதியில் நடந்த நிகழ்ச்சியில் கைத்தறி நெசவாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் பெறுவதற்கான

“7.5% உள்ஒதுக்கீடு- கவர்னர் ஒப்புதலை பெற முதல்வர் நடவடிக்கை ” – செங்கோட்டையன்

அடையாள அட்டைகளை வழங்கிய பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இதனை தெரிவித்தார். மேலும், உயர்நீதிமன்றத்தில் உள்ள வழக்குகள் நிறைவடைந்த உடன் ஆசிரியர்கள் இடமாறுதல் கலந்தாய்வு நடைபெறும் என்று கூறிய அவர், 40 வயதுக்கும் மேல் உள்ள உயர்குடி ஆசிரியர்களுக்கு

“7.5% உள்ஒதுக்கீடு- கவர்னர் ஒப்புதலை பெற முதல்வர் நடவடிக்கை ” – செங்கோட்டையன்

பணிவாய்ப்பு இல்லை என்றும், மற்றவர்களுக்கு 45 வயது வரை பணிவாய்ப்பு வழங்கப்படும் என்றும் கூறினார். பள்ளிகளுக்கு தேவையான புத்தங்கள் வழங்கப்பட்டுள்ளதாக கூறிய அவர், பாடத்திட்டங்கள் குறைப்பு குறித்து ஆய்வுசெய்ய அமைக்கப்பட்ட குழுவின் பரிந்துரை அடிப்படையில் 60 சதவீத பாடங்கள் குறைக்கப்பட்டுள்ளது என்றும், அதிலிருந்து தான் வினாக்கள் கேட்கப்படும் என்றும் தெரிவித்தார்.