7.5 சதவீத உள் ஒதுக்கீடு- ஏழை மாணவர்களின் மருத்துவர் கனவை நனவாக்கிய எடப்பாடி

 

7.5 சதவீத உள் ஒதுக்கீடு- ஏழை மாணவர்களின் மருத்துவர் கனவை நனவாக்கிய எடப்பாடி

அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 7.5 சதவீத இடஒதுக்கீடு வழங்க வகை செய்யும் தமிழக அரசின் மசோதாவுக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் விரைவில் ஒப்புதல் அளிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

7.5 சதவீத உள் ஒதுக்கீடு- ஏழை மாணவர்களின் மருத்துவர் கனவை நனவாக்கிய எடப்பாடி


நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வலியுறுத்தி எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான தமிழக அரசு மேற்கொண்ட முயற்சிகளை நாடு நன்கறியும். மத்திய அரசிடம் கடிதம் மூலமாகவும், நேரிலும் இது தொடர்பாக முதலமைச்சரும், அமைச்சர்களும் பலமுறை வலியுறுத்தினார்கள். இது தவிர நீண்ட சட்டப் போராட்டத்தையும் தமிழக அரசு நடத்தியது. எனினும் உச்சநீதிமன்றம் உறுதியான தீர்ப்பை தந்துவிட்டதால் நீட் தேர்வு, தவிர்க்க முடியாத கட்டாயமாகிவிட்டது.
மத்திய பாடத்திட்டத்தில் பயிலும் வசதியான வீட்டு பிள்ளைகளுடன் தமிழக பாடத்திட்டத்தில், அதிலும் அரசு பள்ளியில் பயிலும் ஏழை எளிய மாணவர்கள் நீட் தேர்வில் எப்படி போட்டிபோட இயலும்? அப்படி போட்டியிடுவது சமநிலையற்ற போட்டியாகத்தானே இருக்கும்! என்கிற எண்ணம் எல்லோரது மனங்களிலும் இருந்தது. இந்த பிரச்சனைகளுக்கு தீர்வு ஏற்படுத்தினார் முதல்வர் எடப்பாடி.

7.5 சதவீத உள் ஒதுக்கீடு- ஏழை மாணவர்களின் மருத்துவர் கனவை நனவாக்கிய எடப்பாடி


இதன்படி மருத்துவப் படிப்பில் அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு 7.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்க வகை செய்யும் மசோதா தமிழக சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டு ஒப்புதலுக்காக ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆளுநரின் ஒப்புதல் கிடைத்த பிறகே மருத்துவக் கலந்தாய்வு தொடங்கும் என்றும் அதிரடியாக அறிவித்தது தமிழக அரசு.
வெறுமனே மசோதாவை நிறைவேற்றிவிட்டு தமிழக அரசு சும்மா இருக்கவில்லை. தாயாரின் மறைவுக்கு துக்கம் விசாரிக்க அண்மையில் ஆளுநர் தம்மை சந்தித்த நிலையிலும் முதல்வர் எடப்பாடி இது தொடர்பாக அவரிடம் வலியுறுத்தியிருக்கிறார். தொடர்ந்து முதல்வரின் வீட்டிலேயே சட்ட அமைச்சர் சி.வி சண்முகம் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டமும் நடைபெற்றது.
இதன் தொடர்ச்சியாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் உட்பட 5 அமைச்சர்கள் ஆளுநரை சந்தித்து அரசு பள்ளி மாணவர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க வேண்டியதன் அவசியத்தை விளக்கமாக எடுத்துக் கூறியுள்ளனர். இவை தவிர மத்திய அரசிடமும் முதல்வர் தரப்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக நம்மிடம் பேசிய தமிழக சுகாதாரத்துறையின் மூத்த அதிகாரி ஒருவர், ’’இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் இப்படி ஒரு மசோதா நிறைவேற்றப்பட்டிருக்கிறது. இதை சட்டமாக்க எந்தெந்த வழிகளில் எல்லாம் முடியுமோ அந்தந்த வழிகளிலெல்லாம் முதல்வர் முயற்சித்துக் கொண்டிருக்கிறார். இதன் காரணமாக ஆளுநர் இதற்கு ஒப்புதல் தரும் சூழ்நிலை கனிந்திருக்கிறது. விரைவில் அந்த நல்ல செய்தி தமிழகத்திற்குக் கிடைக்கும்’’ என்றார் நம்பிக்கையுடன்.ஆக மொத்தத்தில் ஏழை எளிய மாணவர்களின் மருத்துவர் கனவை நனவாக்கியிருக்கிறார்…முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி

7.5 சதவீத உள் ஒதுக்கீடு- ஏழை மாணவர்களின் மருத்துவர் கனவை நனவாக்கிய எடப்பாடி