புதுச்சேரி மாணவருக்கு 7.5% உள் ஒதுக்கீடு வழங்க முடியாது: அரசு திட்டவட்டம்!

 

புதுச்சேரி மாணவருக்கு 7.5% உள் ஒதுக்கீடு வழங்க முடியாது: அரசு திட்டவட்டம்!

தமிழகத்தில் தமிழ் வழிகல்வியில் அரசுப் பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 7.5% இடஒதுக்கீடு சட்டம் கொண்டு வரப்பட்டது. நடப்பு கல்வியாண்டே இச்சட்டம் அமல்படுத்தப்பட்ட நிலையில், புதுச்சேரியிலும் மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 10% இட ஒதுக்கீடு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்த முடிவுக்கு புதுச்சேரி ஆளுநர் கிரண் பேடி எதிர்ப்பு தெரிவித்தார்.

புதுச்சேரி மாணவருக்கு 7.5% உள் ஒதுக்கீடு வழங்க முடியாது: அரசு திட்டவட்டம்!

நடப்பு கல்வியாண்டின் மருத்துவக் கலந்தாய்வு நிறைவடையவிருக்கும் சமயத்தில் 10% உள் ஒதுக்கீடு அளிப்பதை ஏற்க முடியாது என கிரண் பேடி தெரிவித்ததையடுத்து, நடப்பாண்டு அரசு பள்ளி மாணவர்களுக்கு 10% ஒதுக்கீடு இல்லை என அறிவிக்கப்பட்டது. இது தொடர்பாக, புதுச்சேரி பள்ளி மாணவர் ஒருவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5% இட ஒதுக்கீட்டை தனக்கு வழங்குமாறு அந்த மனுவில் கோரியிருந்தார்.

புதுச்சேரி மாணவருக்கு 7.5% உள் ஒதுக்கீடு வழங்க முடியாது: அரசு திட்டவட்டம்!

புதுச்சேரி மாணவர் தொடர்ந்த அந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்கான ஒதுக்கீட்டை புதுச்சேரி மாணவருக்கு வழங்க முடியாது என்றும் ஒருவருக்கு தந்தால் எல்லையோர மாவட்டங்களில் உள்ள அனைத்து மாணவர்களும் இட ஒதுக்கீடு கேட்பர் என்றும் தமிழக அரசு தரப்பில் திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டது.

மேலும், தமிழகத்தில் வசித்து, தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் படித்தவருக்கு மட்டுமே 7.5% இட ஒதுக்கீடு வழங்க முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டது. இரு தரப்பு வாதங்களையும் கேட்டுக் கொண்ட நீதிபதிகள், புதுச்சேரி அரசு பள்ளி மாணவரின் வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.