“7.5% உள்ஒதுக்கீடு – அரசின் எண்ணம் நிறைவேறும்” – செங்கோட்டையன்

“7.5% உள்ஒதுக்கீடு – அரசின் எண்ணம் நிறைவேறும்” – செங்கோட்டையன்

ஈரோடு

7.5 சதவிகிதம் உள் இடஒதுக்கீடு விவகாரத்தில் தமிழக அரசின் எண்ணம் நிச்சயம் நிறைவேறும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ..செங்கோட்டையன் நம்பிக்கை தெரிவித்தார். ஈரோடு மாவட்டம்

“7.5% உள்ஒதுக்கீடு – அரசின் எண்ணம் நிறைவேறும்” – செங்கோட்டையன்

கோபிச்செட்டிப்பாளையம் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை தொடங்கிவைத்த பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இதனை தெரிவித்தார். மேலும், ஏழை மாணவர்கள் மற்றும்
பொருளாதாரத்தில் பின் தங்கியுள்ள மாணவர்கள் இந்த ஆட்சியில்

“7.5% உள்ஒதுக்கீடு – அரசின் எண்ணம் நிறைவேறும்” – செங்கோட்டையன்

பாதுகாக்கப்பட்டு வருவதாக கூறிய அவர், நீட் தேர்வுக்காக 426 மையங்களில் 6 ஆயிரம் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டதாகவும், அதில் பயின்ற அரசு மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளது மகிழ்ச்சி அளிப்பதாகவும் அவர் கூறினார். மேலும், 303 அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பு விரைவில் கிடைக்கும் என்று கூறிய அவர், நீட் தேர்வு உள்ளிட்ட பயிற்சி அளிக்க
தனியார் அமைப்புகளுக்கு அனுமதி வழங்கப்படாது என்று திட்டவட்டமாக தெரிவித்தார்.