7 வருடம் கழித்து ஆஸ்திரேலியாவில் ரிலீஸாகும் சூப்பர் ஸ்டார் படம்!

7 வருடம் கழித்து ஆஸ்திரேலியாவில் ரிலீஸாகும் சூப்பர் ஸ்டார் படம்!

தங்களது அபிமான நடிகர்களின்  படங்கள் திரையிடப்படும் போது எல்லாம் ரசிகர்களுக்கு திருவிழா தான். இது நமது கோலிவுட்டில் மட்டும் நடக்கிற விஷயம் கிடையாது. உலகம் முழுக்கவே திரை ரசிகர்கள் தங்களது அபிமான நடிகர்களின் படங்களைக் கொண்டாடித்தான் வருகிறார்கள்.

தெலுங்கு சினிமாவின் சூப்பர் ஸ்டார் என்று ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படும் நடிகர்  மகேஷ் பாபுவின் படங்கள் ரிலீஸ் ஆகும் போதெல்லாம் தெலுங்கு சினிமா வட்டாரத்தில் திருவிழா தான். 
இந்நிலையில், மகேஷ்பாபு தனது 44வது பிறந்த நாளை  இந்த மாதம் 9ஆம் தேதி  கொண்டாட இருக்கிறார். தங்களது சூப்பர் ஸ்டாரின் பிறந்தநாளைக் கொண்டாட ரசிகர்களும் தயாராகிவிட்டனர். இப்போதே ஆந்திராவில் மகேஷ்பாபுவின் பிறந்தநாள் கொண்டாட்டங்கள் துவங்கிவிட்டன.

ஆஸ்திரேலியாவில், மகேஷ்பாபுவின் பிறந்தநாளை முன்னிட்டு மெல்போனில் உள்ள திரையரங்கில் ஆகஸ்ட் 9ஆம் தேதி மாலை 6.30க்கு மகேஸ் பாபு நடித்து பெரும்  வெற்றி பெற்ற ‘பிசினஸ்மேன்’ திரைப்படம் ரசிகர்களுக்காகத் திரையிடப்பட உள்ளது.