7 மாத குழந்தையை கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்ட போலீஸ்காரரின் மனைவி: வேலூரில் பரபரப்பு!

 

7 மாத குழந்தையை கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்ட போலீஸ்காரரின் மனைவி: வேலூரில் பரபரப்பு!

வீட்டில் யாரும்  இல்லாத நேரத்தில் பவித்ரா குழந்தையைத் தண்ணீர் தொட்டியில் மூழ்கடித்து கொலை செய்துள்ளார்.

வேலூர்: தாய் ஒருவர்  7 மாத குழந்தையை தண்ணீர் தொட்டியில் மூழ்கடித்து கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆற்காடு மேலகுப்பத்தை சேர்ந்த மத்திய பாதுகாப்புப் படையில் பணிபுரியும் காவலர் சுரேஷுக்கும் வேலூரை சேர்ந்த  ரவி என்பவற்றின் மகள்  பவித்ராவுக்கும் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. சுரேஷ் ஜார்க்கண்ட்டில் பணியாற்றி வருகிறார். கடந்த 7 மாதங்களுக்கு முன்பு பவித்ராவுக்கு   ஆண் குழந்தை பிறந்தது. 7 மாத குழந்தையான விஷ்வாவை கணவன் மனைவி இருவரும் பாசமாக வளர்த்து வந்துள்ளனர். 

suicide

இந்நிலையில் குடும்ப தகராறு காரணமாக பவித்ரா தாய் வீட்டில் வசித்து வந்துள்ளார். இதையடுத்து கடந்த 30ஆம் தேதி, வீட்டில் யாரும்  இல்லாத நேரத்தில் பவித்ரா குழந்தையைத் தண்ணீர் தொட்டியில் மூழ்கடித்து கொலை செய்துள்ளார். பின்னர் தானும் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதையடுத்து வீடு திரும்பிய பவித்ராவின் தாய் இதுகுறித்து காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார்  தாய், குழந்தையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து  விசாரணை நடத்தி வருகின்றனர்.

police

இதுகுறித்து போலீசார் தரப்பில் கூறப்பட்டுள்ளதாவது:- ‘தாய் வீட்டில் குழந்தையுடன் வசித்துவந்த பவித்ரா மற்றும் குழந்தையை பார்க்க சுரேஷ் கடந்த 29-ந் தேதி ரயிலில் வந்துக் கொண்டிருந்தார். 30ஆம் தேதி பவித்ரா குழந்தையை  தண்ணீர் தொட்டிக்குள் மூழ்கடித்து கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்துகொண்டுள்ளார். நேற்று முன்தினம் வீடு வந்து சேர்ந்த அவரது கணவர் சுரேஷிடம் அவர்கள் உடல் ஒப்படைக்கப்பட்டது.  திருமணமாகி ஒன்றரை ஆகும் நிலையில் இதுகுறித்து வேலூர் உதவி கலெக்டர் மெகராஜ் விசாரணை நடத்தி வருகிறார்.எங்கள் தரப்பிலும் பவித்ரா தற்கொலை மற்றும் குழந்தையின் கொலை குறித்த காரணங்கள்  குறித்து விசாரித்து வருகிறோம்’ என்று தெரிவித்துள்ளனர்.