7 மணி நேரம் சிறுநீர் கழிக்க விடவில்லை..!  விமானப் பணிபெண்கள் அட்டூழியம்! 

 

7 மணி நேரம் சிறுநீர் கழிக்க விடவில்லை..!  விமானப் பணிபெண்கள் அட்டூழியம்! 

பயணங்கள் சுவாரஸ்யமாவதும், சங்கடமாவதும் நம்மை மட்டுமே சார்ந்தது கிடையாது. நம்மைச் சுற்றியுள்ளவர்களின் மனநிலையும், அவர்களின் செயல்களும் கூட ஒத்துழைத்தால் தான் நமது பயணம் சந்தோஷமாகவும், சுவாரஸ்யமாகவும் மாறும்.  அப்படி, நடுவானில் விமானத்தில் பயணித்துக் கொண்டிருந்த போது தொடர்ந்து 7 மணி நேரமாக சிறுநீர் கழிக்க அனுமதி மறுக்கப்பட்டு அவஸ்தைப்பட்டிருக்கிறார் 23 வயதான ஒரு பெண்.

பயணங்கள் சுவாரஸ்யமாவதும், சங்கடமாவதும் நம்மை மட்டுமே சார்ந்தது கிடையாது. நம்மைச் சுற்றியுள்ளவர்களின் மனநிலையும், அவர்களின் செயல்களும் கூட ஒத்துழைத்தால் தான் நமது பயணம் சந்தோஷமாகவும், சுவாரஸ்யமாகவும் மாறும்.  அப்படி, நடுவானில் விமானத்தில் பயணித்துக் கொண்டிருந்த போது தொடர்ந்து 7 மணி நேரமாக சிறுநீர் கழிக்க அனுமதி மறுக்கப்பட்டு அவஸ்தைப்பட்டிருக்கிறார் 23 வயதான ஒரு பெண். விமான பணிப்பெண்களிடம் இதுபற்றி கூறியதும், எல்லோரும் அவரது கோரிக்கையை அலட்சியப்படுத்தியிருக்கிறார்கள். 

women

அயர்லாந்து நாட்டின் தலைநகர் டப்லின் நகரிலிருந்து, கொலம்பியாவின் பொகடாவுக்கு கனடா ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் விமானம் சென்றது. இந்த விமானத்தில் பயணித்த 26 வயதான பெண்ணுக்கு பயணத்தின் போது சிறுநீர் கழிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. விமானப் பணிப்பெண்ணிடம் பல முறை தனது அவஸ்தையை அவர் கூறியும், அனுமதி மறுத்து விட்டார். சுமார் 7 மணி நேரம் சிறுநீர் கழிக்க முடியாமல் கட்டுப்படுத்திய படியே அவஸ்தையுடன் அவர் பயணத்தை நிறைவு செய்திருக்கிறார். 
`எனக்கு ஏற்கனவே உடல் உபாதைகள் உள்ளன. விமானத்தில் 7 மணி நேரமாக சிறுநீர் கழிக்க முடியாமல் அவதியுற்றேன். பாதுகாப்பு காரணங்களுக்காக தன்னை சிறுநீர் கழிக்க பணிப்பெண்கள் அனுமதிக்கவில்லை. என்னால் இருக்கையில் உட்கார முடியவில்லை. சில மணி நேரங்கள் எனது பார்வை தடைப்பட்டது போல் உணர்ந்தேன். விமானம் நின்றதும் உடனடியாக கழிவறை நோக்கி ஓடினேன். பின்னர் தான் எனக்கு நிம்மதி ஏற்பட்டது’ என்று வேதனையுடன் தெரிவித்தார்.