7 பேர் விடுதலை; மதிமுக ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டம்

 

7 பேர் விடுதலை; மதிமுக ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டம்

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்யக்கோரி மதிமுக சார்பில் ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டம் நடைபெற்று வருகிறது.

சென்னை: பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்யக்கோரி மதிமுக சார்பில் ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டம் நடைபெற்று வருகிறது.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலையில் குற்றம்சாட்டப்பட்டு 20 வருடங்களுக்கும் மேலாக சிறையில் இருக்கும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்ய வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றி தமிழக அரசு ஆளுநருக்கு அனுப்பி வைத்தது. ஆனால் இதுகுறித்த எந்த முடிவையும் எடுக்காமல் ஆளுநர் காலம் தாழ்த்தி வருகிறார். 

இருப்பினும் தருமபுரியில் மூன்று மாணவிகளை எரித்து கொன்ற அதிமுகவை சேர்ந்த 3 பேரை விடுதலை செய்ய ஆளுநர் ஒப்புக்கொண்டார். ஆளுநரின் இந்த செயலுக்கு அரசியல் கட்சியினர் உட்பட பலர் தங்களது எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர். 

இதற்கிடையே 7 பேரை விடுதலை செய்யாத ஆளுநரை கண்டித்து கிண்டியில் இருக்கும் ஆளுநர் மாளிகையை முற்றுகையிடும் போராட்டம் டிசம்பர் 3-ம் தேதி (இன்று) நடக்கும் என்று மதிமுக அறிவித்திருந்தது. மதிமுகவின் இந்த போராட்டத்திற்கு பிரதான எதிர்க்கட்சியான திமுக உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்திருந்தன.

இந்நிலையில், திட்டமிட்டப்படி ஆளுநர் மாளிகையை முற்றுகையிடும் போராட்டம் இன்று தொடங்கியது. இந்த போராட்டத்தில் திமுக சார்பில் டிகேஎஸ் இளங்கோவன், மா.சுப்ரமணியம் உள்ளிட்டோரும், விசிக சார்பில் அக்கட்சியின் தலைவர் திருமாவளவனும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் அக்கட்சியின் மாநில செயலாளர் முத்தரசனும், தோழமை கட்சியினரும் பங்கேற்றுள்ளனர். தடையை மீறிய போராட்டம் என்பதால் போராட்டத்தில் பங்கேற்றவர்கள் எந்நேரமும் கைது செய்யப்படலாம் என தெரிகிறது.