7 பேர் விடுதலை: தமிழக அரசு தன் கடமையை செய்துவிட்டது; கைவிரித்த சட்ட அமைச்சர்!

 

7 பேர் விடுதலை: தமிழக அரசு தன் கடமையை செய்துவிட்டது; கைவிரித்த சட்ட அமைச்சர்!

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை விவகாரத்தில் தமிழக அரசு தனது கடமையைச் செய்து விட்டதாக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார்.

காஞ்சிபுரம்: பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை விவகாரத்தில் தமிழக அரசு தனது கடமையைச் செய்து விட்டதாக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார்.

இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 28 ஆண்டுகளாக சிறைவாசம் அனுபவித்து வரும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை விவகாரத்தில் ஆளுநர் மாளிகை மவுனம் சாதித்து வருகிறது. 

rajiv case

7 பேரையும் விடுதலை செய்து உத்தரவிட ஆளுநருக்கு தமிழக அரசு பரிந்துரைத்தும், தற்போது வரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதற்கிடையே, ஜெயலலிதா கைது செய்யப்பட்டதை கண்டித்து மூன்று மாணவிகளை உயிரோடு கொளுத்திய 3 அதிமுக நிர்வாகிகளை முன்விடுதலை செய்து ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உத்தரவிட்டிருந்தார்.

இந்நிலையில், காஞ்சிபுரத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம், “பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை விவகாரத்தில் தமிழக அரசு ஆளுநரிடம் பரிந்துரை செய்து விட்டது. இதில் எங்கள் கடமையை நாங்கள் செய்துவிட்டோம். ஆளுநரின் முடிவுக்குப் பின்னர் அடுத்தகட்ட நடவடிக்கையை அரசு எடுக்கும்” என பட்டும்படாமல் பதில் கூறியபடி சென்றுவிட்டார்.